Asianet News TamilAsianet News Tamil

ரயில் பயணமா? பான், ஆதார் கார்டு, இனி ரயில் நிலையத்திலேயே விண்ணப்பிக்கலாம்

ரயில் பயணத்தின்போது, ஆதார் கார்டு இல்லை, பான் கார்டு இல்லை என கவலைப்படத் தேவையில்லை. சில குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் ஆதார், பான் கார்டு வசதியை ரயில்வே துறை பரிசோதனை முயற்சியாக கொண்டுவர இருக்கிறது.

Now apply for PAN, Aadhaar Card, file taxes at these railway stations
Author
New Delhi, First Published Mar 11, 2022, 12:18 PM IST

ரயில் பயணத்தின்போது, ஆதார் கார்டு இல்லை, பான் கார்டு இல்லை என கவலைப்படத் தேவையில்லை. சில குறிப்பிட்ட ரயில்நிலையங்களில் ஆதார், பான் கார்டு வசதியை ரயில்வே துறை பரிசோதனை முயற்சியாக கொண்டுவர இருக்கிறது.

ரயில் நிலையங்களில்இதுபோல் கொண்டுவரப்படும் இ-சேவை மையங்களில் ஆதார், பான்கார்டு மட்டும்லலாமல், மொபைல் பில் செலுத்துதல், வருமானவரி ரி்ட்டன் தாக்கல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்க இருக்கிறது.

Now apply for PAN, Aadhaar Card, file taxes at these railway stations

கவலையில்லை

இதனால் ரயில் பயணத்தில் செல்லும் பயணிகள் கடைசிநேரத்தில் பில் கட்ட மறந்துவிட்டோம், ஆதார் கார்டை தொலைத்துவிட்டோம், வீட்டில் மறந்துவிட்டோம் எனக் கவலைப்படத் தேவையில்லை. இந்த இ-சேவை மையத்தில் சென்று ஆதார் கார்டு, பான்கார்டு நகலை பதவிறக்கம் செய்து, நகல் எடுத்துக்கொள்ளலாம். மொபைல் பில், தொலைப்பேசி கட்டணம் ஆகியவற்றையும் பயணத்தின்போது செலுத்திவிடலாம். இந்த இ-சேவை மையத்துக்கு ரயில்வே துறை சார்பில் “ரயில்வயர் சாதி கியோஸ்க்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

என்ன சேவை கிடைக்கும்

ரயில் நிலையங்களில் தொடங்கப்படும் இந்த இ-சேவை மையத்தில், ஆதார், பான் கார்டு விண்ணப்பித்தல், நகலெடுத்தல், பதிவிறக்கம் செய்தல், வருமானவரி தாக்கல் செய்தல், வாக்காளர் அட்டை நகலெடுத்தல், பதிவிறக்கம் செய்தல், காப்பீடு, பேருந்து டிக்கெட் முன்பதிவு, விமான டிக்கெட் முன்பதிவு, வங்கிச்சேவை என பல சேவைகள் ஒரே இடத்தில் கிடைக்கும்.

Now apply for PAN, Aadhaar Card, file taxes at these railway stations

பரிசோதனை முயற்சி

தற்போது இந்த இ-சேவை மையங்கள் வடகிழக்கு ரயில்வேயின் இரு ரயில்நிலையங்களில் பரிசோதனையாக அமைக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரம், பிராயாக்ராஜ்  ராம்பாக்நகரம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசேவை மையங்களை அந்த கிராமத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் நடத்துகிறார்கள்.

2-வது கட்டமாக பல்வேறு நகரங்களில் இந்த இ-சேவை மையங்களை ரயில்வே துறைஅமைக்கத்திட்டமிட்டுள்ளது. அதில் குறிப்பாக கோரக்பூர், வீரன்கானா லட்சுமிபாய் ரயில்நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.

Now apply for PAN, Aadhaar Card, file taxes at these railway stations

200 ரயில்நிலையங்கள்

இதுகுறித்து வடகிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்புஅதிகாரி பங்கஜ் குமார் கூறுகையில் “ ரயில்வே துறை சார்பில் பரிசோதனை முயற்சியாகஅமைக்கப்பட்ட ரயில்நிலையத்தில் இசேவை மையங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இதைத்தொடர்ந்து, புதிதாக 200 ரயில்நிலையங்களில் இசேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன

. தெற்கு மேற்கு ரயில்வேயில் 44 இசேவை மையங்கள், வடகிழக்கில் 20 இசேவை நிலையங்கள், கிழக்கு மத்திய ரயில்வேயில் 13 இசேவை நிலையங்கள், மேற்கு ரயில்வேயில் 15 இசேவை மையங்கள், மேற்கு மத்திய ரயில்வேயில் 12 இசேவை, கிழக்குகடற்கரை ரயில்வேயில் 13, வடகிழக்கில் 56 இசேவை மையங்கள் தொடங்கப்படஉள்ளன” எனத் தெரிவித்தார்


 

Follow Us:
Download App:
  • android
  • ios