நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது.. எந்தெந்த நாட்கள் தெரியுமா? முழு விவரம் இதோ..

நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

November 2023 Bank holidays list : Banks to remain closed for 15 days check details here Rya

அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. எனவே நவம்பரில் வரவிருக்கும் வங்கி விடுமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் நிதி நடவடிக்கைகளைத் திட்டமிடுவதை உறுதி செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை முன்கூட்டியே வெளியிடுகிறது.

அதன்படி நவம்பர் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடு முழுவதும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்தாது. ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும். எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி வேலை இருந்தால், வங்கி விடுமுறை நாட்களைப் பார்த்து, அதற்கேற்ப வேலையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் உட்பட 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னட ராஜ்யோத்சவா/குட்/கர்வா சௌத் விழாவையொட்டி சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல். வாங்கலா விழா, கோவர்தன் பூஜை/லக்ஷ்மி பூஜை, தீபாவளி)/தீபாவளி, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜை, பைடூஜ்/சித்ரகுப்த் ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை, தீபாவளி, நிங்கோல் சத்ரித்வி, குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா மற்றும் கனகதாச ஜெயந்தி ஆகிய பண்டிகைகளை பொறுத்து பல மாநிலங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத விடுமுறை பட்டியல் 

  • நவம்பர் 1: கன்னட ராஜ்யோத்சவா/குட்/கர்வா சௌத் (கர்நாடகா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம்)
  • நவம்பர் 5: ஞாயிறு
  • நவம்பர் 10: வாங்கலா திருவிழா (மேகாலயா)
  • நவம்பர் 11: 2-வது சனிக்கிழமை
  • நவம்பர் 12 : ஞாயிறு / தீபாவளி 
  • நவம்பர் 13: கோவர்தன் பூஜை/லக்ஷ்மி பூஜை (திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்)
  • நவம்பர் 14: விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம்/லக்ஷ்மி பூஜை (குஜராத், மகாராஷ்டிரா, சிக்கிம், கர்நாடகா)
  • நவம்பர் 15: பைடூஜ்/சித்ரகுப்த ஜெயந்தி/லக்ஷ்மி பூஜை (சிக்கிம்)
  • நவம்பர் 19: ஞாயிறு
  • நவம்பர் 25: 4-வது சனிக்கிழமை
  • நவம்பர் 26: ஞாயிறு
  • நவம்பர் 20: சாத் (காலை அர்க்யா) (பீகார், ராஜஸ்தான்)
  • நவம்பர் 23: செங் குட்ஸ்னெம்/எகாஸ்-பக்வால் (உத்திரகாண்ட், சிக்கிம்)
  • நவம்பர் 27: குருநானக் ஜெயந்தி/கார்த்திகா பூர்ணிமா/ரஹஸ் பூர்ணிமா (திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகாண்ட், ஹைதராபாத் - தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரபிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புது தில்லி, பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம்)
  • நவம்பர் 30: கனகதாச ஜெயந்தி (கர்நாடகா)

நீங்க இந்த வங்கி வாடிக்கையாளரா..! இனிமேல் இந்த கட்டணங்கள் கிடையாது - முழு விபரம் இதோ !!

எனினும் இந்த விடுமுறை நாட்களில், நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் அல்லது UPI போன்ற ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கும் எந்த தடையும் இருக்காது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios