ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அதிரடி நோட்டீஸ்...?? நேரில் ஆஜராக உத்தரவு .!!!

மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மற்றும் ரூ.2000 நோட்டுக்கு சில்லறை கிடைக்காதது போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதி படுகிறார்கள் .

ஆனால், ரிசர்வ் வங்கியின் சார்பாக மத்திய அரசு பல புதிய திட்டத்தை தொடர்ந்து தெரிவிக்கிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பணத்தட்டுப்பாடு பிரச்னை முழுவதுமாக தீர்வதற்கு இன்னும் மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை ஆகும் என்று நேற்று மாலை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

இதனால் பொதுமக்கள் மேலும் பல சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் , விளக்கம் கேட்டு , ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

இதையடுத்து, பணத்தட்டுப்பாடு தொடர்பாக, வருகிற டிசம்பர் 15ம் தேதிக்குள் நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு முன்பு, நேரில் ஆஜராகி பதில் அளிக்கும்படி, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுபியுள்ளார் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் கே.வி.தாமஸ் .....!


.