அப்பாடா ....!!! இனி தங்கம் எவ்ளோ வைத்திருந்தாலும் கட்டுப்பாடு இல்லையே.....!!!!

தனிநபர்  வைத்திருக்கும்  தங்கத்துக்கு எந்த  கட்டுப்பாடுகளும்  இல்லை  என  தற்போது  மத்திய  நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது  

பழைய  500,  1000 ரூபாய்  செல்லாது என  மத்திய  அரசு அறிவித்ததை தொடர்ந்து, பல  நெருக்கடிகள்  ஏற்பட்டது.

வங்கி  கணக்குகளில்,  டெபாசிட்  செய்வதற்கு  கூட பல  கட்டுப்பாடுகள் இருப்பதால், அனைவரும்  தங்கத்தின் மீது  ஆர்வம்  காட்ட  தொடங்கி , ரூபாய்  நோட்டுகள் செல்லாது என அறிவித்த  இரவே ,  இரவோடு  இரவாக  விடிய விடிய  தங்கத்தை  வாங்கி குவித்துள்ளனர்.

இதனால்,  டெபாசிட்   செய்ய  முடியாத  பணம்  அனைத்தும்  தங்கமாக  மாறியதை அடுத்து, கருப்பு  பணத்தை ஒடுக்கும் முயற்சியை தொடர்ந்து  ,  தங்கம்  வாங்கியவர்கள்  மீது  நடவடிக்கை  பாயும்  என  எதிர்பார்கபட்டது.இந்த  விவகாரம்  பல  சர்ச்சையை   ஏற்படுத்தியது.

இந்நிலையில், தங்கம்  வாங்கி  தனிநபர்  டிஜிட்டல் லாக்கரை வருவாய்துறை  அதிகாரிகள்  முன்னிலையில் தான்  திறக்க  வேண்டும்  என  வெளியான  தகவலுக்கு   மத்திய  அரசு சார்பில் மறுப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,  தனிநபர்  வைத்திருக்கும்  தங்கத்துக்கு எந்த  கட்டுப்பாடுகளும்  இல்லை  என  தற்போது  மத்திய  நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது  என்ற    செய்தி  தற்போது, மக்களை  பெருமூச்சி விட வைத்திருகிறது.