விவசாயிகள் நலனுக்காகவும், வேளாண்மைக்காவும் தமிழக அரசு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ததைத்போன்று மத்திய அரசும் வேளாண் பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. டிஆர்பாலு வைத்த கோரிக்கையை மத்தியஅரசு நிராகரித்துவிட்டது.
விவசாயிகள் நலனுக்காகவும், வேளாண்மைக்காவும் தமிழக அரசு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ததைத்போன்று மத்திய அரசும் வேளாண் பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. டிஆர்பாலு வைத்த கோரிக்கையை மத்தியஅரசு நிராகரித்துவிட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.பிக்கள் பேசி வருகிறார்கள்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, திமுகஎம்.பி. டிஆர் பாலு ஒரு கோரிக்கையை வைத்தார். அவர் பேசுகையில் “ தமிழகத்தில் , விவசாயிகள் நலனுக்காக வேளாண் வளர்ச்சிக்காகத் தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதுபோன்று நாடுமுழுவதும் தனியாக வேளாண் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போதுதான் விவசாயிகளின் பிரச்சினைகளை களைய முடியும். உலகளவில் பல்வேறு பிரச்சினைகள் , கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோதிலும் இந்தியாவால் தாக்குப்பிடிக்க முடிந்ததற்கு காரணம் வலிமையான வேளாண் துறையும், விவசாயிகளும்தான்.
எங்களின் முதல்வர் முக ஸ்டாலின் வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் கொண்டுவந்தார். வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் கொண்டுவருவது பற்றி ஏன் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை ” எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதில் அளித்துப் பேசுகையில் “ வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், தேசத்துக்கோ, விவசாயிகளுக்கோ எந்த பலனும் இல்லை. டிஆர் பாலு வைத்த கோரிக்கை அனைவரும் விரும்பக்கூடியதுதான்.

இதற்கு முன் ர யில்வேக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, ரயில்வே பட்ஜெட்டை ரத்து செய்து பொது பட்ஜெட்டோடுஇணைத்தது.
நாம் தீர ஆய்வு செய்தால், ரயில்வே பட்ஜெட்டை நடைமுறைப்படுத்துவில் மிகப்பெரிய வேறுபாடு இருந்திருக்கும். பட்ஜெட் ஒன்று அல்லது 2 பட்ஜெட்டாக இருந்தாலும், அதை செயல்படுத்த வழிகாட்டல் இருக்க வேண்டும். போதுமான வழிமுறைகள், அதை நடைமுறைப்படுத்தும் தீர்மானம் இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகள், வேளாண் நலனில் முழுமையாக அக்கறையுடன் இருக்கிறது. வேளாண்மைக்குத் தனியாக பட்ஜெட் என்பது, பிரதான பட்ஜெட்டிலிருந்து நிதியை வெளியே எடுக்க வேண்டியதிருக்கும். இதனால் தேசத்துக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எந்தப் பலனும் இல்லை
இவ்வாறு நரேந்திர தோமர் பதில்அளித்தார்
