nitin gadgari பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் விற்பனை நடப்பு நிதியாண்டில் 162 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்
பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் விற்பனை நடப்பு நிதியாண்டில் 162 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துப் பேசியதாவது:

423 சதவீதம் அதிகரிப்பு
ஒவ்வொரு ஆண்டிலும் பேட்டரியில் இயக்கப்படும் வாகனங்கள் விற்பனை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இரு சக்கரவாகனங்கள் விற்பனை 5 மடங்கு அதிகரித்து 423 சதவீதம் அதிகரித்துள்ளது. 3 சக்கர வாகனங்கள் விற்பனை 75 சதவீதமும், 4 சக்கர வாகனங்கள் விற்பனை 238 சதவீதமும் விற்பனை அதிகரித்துள்ளன. பேருந்துகள் விற்பனை 1,250 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 10லட்சத்து 95ஆயிரத்து 746 பேட்டரிவாகனங்கள் பதிவு செய்யப்பட்டுல்ளன. இந்த வாகனங்களுக்காக ஒட்டுமொத்தமாக 1,742 சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

85சதவீதம் தயாரிப்பு
பேட்டரி மாற்றும் விஷயத்தைப் பொறுத்தவரை லித்தியம் பேட்டரியில் 85 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. நிலையான தரமானபேட்டரி பொருத்த வேண்டும்.எந்த உற்பத்தியாளராவது தரமற்ற பேட்டரிகளை உற்பத்தி செய்தால், வாகனங்களில் பொருத்திக்கொடுத்தால் அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்ஜிங் மையங்கள்
பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் மையங்கள் உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முன்னுரிமை என்பது சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத சக்தியை பயன்படுத்துவதுதான். புதிய ஆய்வுகள், ஸ்டார்ட்அப்களுக்கு வாய்ப்பளித்தல், முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வசதியான, செலவுகுறைவான வாகனத்தை உருவாக்கிக்கொடுத்தலாகும்.

ஒவ்வொரு 40 கி.மீ தொலைவுக்கும் சார்ஜிங் மையங்கள், அதுதொடர்பான வசதிகளை உருவாக்க தேசியநெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருகிறது. இந்தசார்ஜிங் மையங்கள் சூரியஒளி சக்தி மூலமும், காற்றாலை மின்சக்தி மூலம் இயங்கும்வகையில் உருவாக்கப்படும்
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
