தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி! பிஜி தீவில் இருந்து வரும் ஸ்பெஷல் வாட்டர்!
Nita Ambani drinks most expensive water in Gold Bottle: நீடா அம்பானியின் தண்ணீர் பாட்டில் மெக்சிகன் வடிவமைப்பாளரால் தங்கத்தால் செய்யப்பட்டது. அதில் அவர் குடிக்கும் நீர் தான் உலகின் விலை உயர்ந்த தண்ணீர். அதில் 24-காரட் தங்கத் துகள்கள் கலந்திருக்குமாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, பேஷன்களை உருவாக்குவதில் பெயர் பெற்றவர். வணிகத்தில் அவரது திறமையான செயல்பாடுகள் கவனம் பெற்றுள்ளன. அவர் பயன்படுத்தும் ஆடம்பரமான பொருட்களும் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகத் தவறவிடுவதில்லை.
இப்போது, நிதா அம்பானி குடிக்கும் தண்ணீர் ட்ரெண்ட் ஆகியுள்ளது. நீடா அம்பானி குடிப்பது தான் உலகின் மிக விலையுயர்ந்த தண்ணீர் என்றும் குடிநீருக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலை அவர் பயன்படுத்துவதும் கூறப்படுகிறது. இந்த பாட்டிலின் மதிப்பு ரூ. 49 லட்சம் என்று சொல்லப்படுகிறது.
மெக்சிகன் வடிவமைப்பாளரான பெர்னாண்டோ அல்டமிரானோ வடிவமைத்த இந்த பாட்டில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது. அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிப்யூடோ ஏ மோடிக்லியானி எனப் பெயரிடப்பட்ட உலகின் விலையுயர்ந்த நீர் இந்த பாட்டிலில் உள்ளது. இந்த நீரில் 24-காரட் தங்கத் துகள்கள் கலந்திருக்குமாம்.
டீன் ஏஜ் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கம் இருமடங்குக்கு மேல் உயர்வு! என்ன காரணம்?
பிஜி மற்றும் பிரான்சில் இருந்து வரும் இயற்கை நீரூற்று நீர், ஐஸ்லாந்தின் பனிப்பாறை நீர் தான் இந்த பிராண்டில் விற்கப்படுகிறது. குறிப்பாக, இந்த நீரில் 24-காரட் தங்க தூசியும் சேர்க்கப்பட்டிருக்கிறதாம். இதைக் குடிப்பதன் மூலம், ஒருவரின் சருமத்தை எப்போதும் புதுப்பொலிவுடன் வைத்திருக்க முடியுமாம்.
இந்தத் தண்ணீர் பாட்டில் ஒரு ஏலத்தில் 60,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டதாம். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 49 லட்சம் ரூபாய். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, நீதா அம்பானி தனது தங்க பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பது போன்ற மார்ஃபிங் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், இந்தத் தகவல் உண்மையா என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். 2015ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியின் போது நீடா அம்பானி வழக்கமான தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடிப்பதைப் பார்க்க முடிந்தது என்பதை அவர்கள் நினைவுகூர்கிறார்கள்.
"ஆல் ஐஸ் ஆன் ரஃபா" இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் பகிரப்படும் போட்டோ! காரணம் என்ன?