மத்திய பட்ஜெட் தாக்கல் செய்துவரும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது உரையில் 'பூமி திருத்தி உண்' என்னும் அவ்வை ஆத்திச்சூடியின் வரிகளை மேற்கோள் காட்டினார்.

பூமி திருத்தி உண் அர்த்தம் என்ன? நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும். அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!

இரண்டு ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. விவசாயிகளின் நலனுக்காக 16 அம்ச திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. தனது உரையின் தொடக்கத்தில் "சலிமார் பூங்காவை போன்றது இந்தியா. தால் ஏரியில் உள்ள தாமரை மலரை போன்றது நம் நாடு, உலகத்திலேயே சிறந்த நாடு இது, " என்ற காஷ்மீர் கவிதையை இந்தியில் வாசித்தார் நிர்மலா சீதாராமன். 

பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் உரையில் நிர்மலா சீதாராமன் வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து  புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார்.