nirmala sitaraman :கொரோனாவில் தாய் தந்தையை இழந்து ஆதரவின்றி இருக்கும் சிறுமியிடம், தந்தைபெற்ற வீ்ட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி எல்ஐசி நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுத்துவந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தற்போது மத்திய நிதிஅமைச்சர் நிர்மாலா சீதாராமன் தலையிட்டுள்ளார்.
nirmala sitaraman :கொரோனாவில் தாய் தந்தையை இழந்து ஆதரவின்றி இருக்கும் சிறுமியிடம், தந்தைபெற்ற வீ்ட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தக் கோரி எல்ஐசி நிர்வாகம் தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி நெருக்கடி கொடுத்துவந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தற்போது மத்திய நிதிஅமைச்சர் நிர்மாலா சீதாராமன் தலையிட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசம் போபால் நகரைச் சேர்ந்தவர் 17வயதான வனிஷா பதக். கொரோனா பெருந்தொற்றின்போது தாய்,தந்தை இருவரையும் பதக் இழந்து ஆதரவற்ற நிலைக்கு சென்றார். பதக்கிற்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.பதக்கின் தந்தை எல்ஐசி முகவராக இருந்தார். அப்போது எல்ஐசியில் ரூ.29 லட்சம் கடன்பெற்றுள்ளார். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தும் முன்பே அவர் கொரோனாவில் இறுந்துவி்ட்டார்.

ஆனால், அந்த சிறுமிக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி, கடனைத் திருப்பிச் செலுத்துமாறு எல்ஐசி நிர்வாகம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட கால்கெடுவுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எல்ஐசி நிர்வாகம் மிரட்டியது.
வனிஷா பதக்கின் தந்தையின் எல்ஐசி சேமிப்பு, அவர் முகவராக இருந்தபோது கிடைக்கும் கமிஷன் தொகை அனைத்தையும் எல்ஐசி நிர்வாகம் முடக்கிவிட்டது. இதையடுத்து, எல்ஐசி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதிய வனிஷா பதக், கடனைத் திருப்பிச்செலுத்த அவகாசம் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இந்நிலையில் ஆங்கில நாளேட்டுக்கு வனிஷா பதக் அளித்த பேட்டியில் “ என் தந்தையின் சொத்துக்கள், கமிஷன் தொகைஅனைத்தையும் எல்ஐசி நிறுத்திவைத்துள்ளது. வருமானத்துக்கு வழியில்லாமல் இருக்கிறோம், கடனையும் செலுத்த முடியவில்லை. என்னைப் பராமரித்துவரும் எனது மாமாவிடமும் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு பணம் இல்லை.” எனத் தெரிவித்தார்

வனிஷாவின் கோரிக்கைக் கடிதத்தை எல்ஐசி நிர்வாகம் டெல்லிஅலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்தப்பதிலும் இல்லை.இதற்கிடையே வனிஷா பதக்கின் நிலை குறித்து நாளேடுகள் மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து நிர்மலா சீதாராமன், அந்த சிறுமிக்கு இருக்கும் கடன்கள், தற்போதைய நிலைமை, கடன் நிலுவை உள்ளிட்ட அனைத்தையும் அறிக்கையாக அளிக்கவும், இதில் கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
