Asianet News TamilAsianet News Tamil

Share Market Today: பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 360 புள்ளிகள் ஏற்றம்! நிப்டி மீண்டும் எழுச்சி

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 2வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை இன்று முடித்துள்ளன.

Nifty closes above 18,100, while the Sensex rises 361 points.
Author
First Published Dec 27, 2022, 3:49 PM IST

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 2வது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை இன்று முடித்துள்ளன.

சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் விதிமுறைகளில் தளர்வு, சீனாவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும் என்று முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது, ஆசியப் பங்குச்சந்தைகளில் சாதகமான போக்கு போன்றவற்றால் இந்திய முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனால் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.5.50 லட்சம் கோடி உயர்ந்தது.

இதே சாதகமான போக்கு இன்றும் சந்தையில் நிலவி வருகிறது. காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது. காலை வர்த்தகம் தொடங்கியும் 300 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் சரியத் தொடங்கியது.

ஆனால், பிற்பகல் வர்தத்கத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கியதால், சந்தையில் உயர்வு காணப்பட்டது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 60,927 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 117 புள்ளிகள் அதிகரித்து, 18,132 புள்ளிகளில் முடிந்தது. காலையில் 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ்சென்ற நிப்டி மீண்டும் 18ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து முடிந்தது

Follow Us:
Download App:
  • android
  • ios