NHAI HIGHER OFFICIAL GOT COMMISSION FOR THE PROJECT FROM AMERICAN CTM SMITH COMPANY

இந்தியாவில் நிறைவேற்றப்பட பல திட்டங்கள் இருந்தாலும், அதில் அதிமுக்கியமான திட்டம் ஒன்று என்றால், அது தேசிய நெடுஞ்சாலை அமைப்பதும் ஒன்று.இந்த திட்டத்தை பெறுவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனம் 7.61 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது, அமெரிக்காவின் உள்ள பாஸ்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மாபெரும் நிறுவனம் சிடிஎம் ஸ்மித்,இதனுடைய கிளை நிறுவனம் சிடிஎம் இந்தியா என்ற பெயரில் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்நிறுவனம் இதுவரை 11.80 லட்சம் டாலர் அதாவது 7.61 கோடி ரூபாயை லஞ்சமாக, NHAI (தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ) அதிகாரிகளுக்கு வழங்கியதாக, அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுஞ்சாலை ஒப்பந்தம், நீர் திட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களை, இந்நிறுவனத்திற்கு வழங்கப்படுவதற்காக, இந்திய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளதை அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே அவமானமாகத்தான் கருதப்படுகிறது.

அமெரிக்க நிறுவனம் லாபம் ஈட்டியது எவ்வளவவு ?

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, சிடிஎம் ஸ்மித் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்த பணிகள் மூலமாக அந்நிறுவனம் இதுவரை 40 லட்சம் டாலர் லாபம் ஈட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் அதிகாரிகளும் லஞ்சம்

இதுமட்டுமில்லாமல் சிடிஎம் ஸ்மித் நிறுவன இந்தியப் பிரிவு அலுவலகம், கோவாவில் ஒரு நீர் திட்டப் பணியை நிறைவேற்ற உள்ளூர் அதிகாரிகளுக்கு 25 ஆயிரம்டாலர் தொகையை அளித்துள்ளது என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்திய அரசும் விசாரணை நடத்த வேண்டும் என,அமெரிக்க நீதித்துறை இந்தியாவை கேட்டுக்கொண்டதன் பேரில், மத்திய தரைவழி போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிர்வாக ரீதியில் விசாரணை நடத்துமாறு NHAI தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.