ரூ.5-10 லட்சம் மாத வருமானம் அல்லது முதலீடு செய்ய தயாரா? ஃப்ரான்ஸ், இத்தாலி, கிரீஸ், கிரெனடா போன்ற நாடுகள் நிதி சுதந்திரம் மற்றும் முதலீட்டு அடிப்படையிலான குடியேற்ற திட்டங்களை வழங்குகின்றன. இந்திய இளைஞர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிக்கின்றனர்.

செமையான செய்தி ஒன்று வெளியாகி இருக்குது. வெளிநாட்டுல செட்டில் ஆக நினைப்போருக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அது மிகையல்ல. வெளிநாடு செல்வதே மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வாக இருக்கும் போது அங்கு குடியுரிமை கிடைத்தால், 2 லட்டு அல்ல 20 லட்டை தனியாக தின்பதை போல மகிழ்ச்சிதானே.

வெளிநாட்டு குடியுரிமை கனவை நனவாக்கும் வாய்ப்பு

மாத வருமானம் ரூ.5–10 லட்சமா? அல்லது ஒரு ஹோட்டல், ஸ்டார்ட்அப், இல்லவேனில் ஒரு குடியிருப்பில் சில லட்சம் முதலீடு செய்ய தயாரா? அப்படியானால், உங்கள் வருமானத்தைக் கொண்டு நீண்டகால வெளிநாட்டு குடியேற்றம் அல்லது சில நேரங்களில் குடியுரிமையும் பெற முடியும்.

எந்தெந்த நாடுகள் வாய்ப்பளிக்கின்றன?

ஃப்ரான்ஸ், இத்தாலி, கிரீஸ், கிரெனடா உள்ளிட்ட நாடுகள் தற்போது "நிதி சுதந்திர" மற்றும் "முதலீட்டு அடிப்படையிலான குடியேற்ற திட்டங்களை" இந்தியர்களுக்கு திறந்துவிட்டுள்ளன. Garant.in என்ற உலகளாவிய குடியேற்ற ஆலோசனை நிறுவனம் இந்நிலையில் இந்தியாவில் அலுவலகம் தொடங்கி, முதல் 3 மாதங்களில் 4,000க்கு மேற்பட்ட கேள்விகளைப் பெற்றுள்ளது. அதில் இந்திய இளைஞர்கள் ஆர்வமுடன் அப்ளிகேஷன் கொடுத்துள்ளனர்.

ஏன் இந்தியர்கள் வெளிநாட்டை நாடுகிறார்கள்?

இந்தியர்கள் நன்கொடை கொடுத்து தரத்தை பெற விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக முதலீட்டில் லாபமும் குடியுரிமையும் தேடுகிறார்கள். மேலும், டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க குடியேற்ற சட்டங்கள், அதிகரித்த நாடுகடத்தல் சம்பவங்கள் ஆகியவையும் இந்தியர்கள் அமெரிக்காவை தவிர்த்து வெளிநாட்டு குடியேற்றத்தைத் தேடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

நிதி சுதந்திர விசா என்றால் என்ன?

இந்த திட்டத்தில், ஒரு நபர் மாதத்திற்கு €5,000 (ரூ.4.5 லட்சம்)–€10,000 (ரூ.9 லட்சம்) வருமானம் நிலையாக இருக்க வேண்டும். இதில் நீண்டகால குடியுரிமை வழங்கப்படுகிறது. சில ஆண்டுகளில், அந்தக் குடியேற்றம் குடியுரிமையாவதும் சாத்தியம்.

கிரெனடா- சிறந்த புதிய தேர்வு!

கெரிபியன் தீவுகளில் ஒன்று, கிரெனடா, பாதுகாப்பான நாடாக கருதப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஹாங்காங்க், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கான விசா இல்லா பயணம் கிடைக்கும். குடியுரிமைக்காக,

$235,000 (ரூ.1.95 கோடி) நன்கொடை

அல்லது $270,000 (ரூ.2.25 கோடி) மதிப்பிலான சொத்துகளில் முதலீடு தேவை.

இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் – யார் என்ன தருகிறார்கள்?

இத்தாலி

முதலீட்டுடன் 2-3 மாதத்தில் குடியேற்ற விசா

5 ஆண்டுகளில் நிரந்தர குடியேற்றம்

10 ஆண்டுகளில் குடியுரிமை

கிரீஸ்

€250,000 (ரூ.2.25 கோடி) மதிப்பில் வீடு வாங்கினாலே குடியேற்ற உரிமை

ஸ்பெயின்

€500,000 (ரூ.4.5 கோடி) மதிப்பில் சொத்து முதலீடு

  • Golden Visa & Golden Passport என்றால்?
  • Golden Visa என்பது வேகமான குடியேற்றத்தை வழங்கும் வழி. சில நாடுகளில் 5–10 ஆண்டுகளில் குடியுரிமையாக மாறும்.
  • Golden Passport என்பது – சில நாடுகளில் 6–8 மாதத்தில் குடியுரிமையே கிடைக்கும்.
  • உதாரணமாக, மால்டா போன்ற நாடுகள் குறுகிய காலத்தில் குடியுரிமை வழங்கினாலும், அந்த திட்டங்கள் ஐரோப்பிய சட்டங்களை மீறுவதாக கருதப்படுகின்றன.
  • முக்கிய கவனிக்க வேண்டியவை
  • அனைத்து நாடுகளும் பூரண சரிபார்ப்பு செய்கின்றன
  • சில நாடுகள் மொழி தேர்வையும் அவசியமாக்கும்
  • எந்தவொரு திட்டத்திலும் முதலீட்டின் சட்டபூர்வ தரம் மற்றும் எதிர்கால விளைவுகள் பற்றி நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்

முதலீட்டு அடிப்படையிலான குடியேற்ற திட்டங்கள், நிதி வசதியான இந்தியர்களுக்கான சிறந்த வாய்ப்பாக வளர்ந்து வருகின்றன. வீட்டின் மதிப்பில் முதலீடு செய்வதைவிட, ஒரே தொகையை வெளிநாட்டில் போடுவதால் வாழ்வாதாரம், கல்வி, மருத்துவம், பயண சுதந்திரம் போன்ற பலன்கள் கிடைக்கின்றன. வாழ்க்கையை ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்து செல்ல இது ஒரு அரிய வாய்ப்பு!