Asianet News TamilAsianet News Tamil

யாருக்காவது ஞாபகம் இருக்கா..? “ புது ரேஷன் கார்டு ” வாங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க  உடனே.....!!!   

new ration-card-in-online
Author
First Published Nov 4, 2016, 5:48 AM IST


யாருக்காவது ஞாபகம் இருக்கா..? “ புது ரேஷன் கார்டு ” வாங்க ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க  உடனே.....!!!   

புதிய ரேஷன் கார்டுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை தீபாவளி முதல் துவக்க தமிழக அரசு முடிவு செய்தது ..

ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும் நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது. இதனால் புதிய ரேஷன் கார்டுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது உணவுத்துறை.

இதற்காகத் தொடங்கப்பட்டுள்ள ‘tnpds.com’ என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.பிறகு கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, குடும்ப உறுப்பினரின் பெயர்களையும், அதற்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்னர், காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டும் .

இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும் அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். ...

புதிய பதிவிற்கு இது  கண்டிப்பா தேவை ...!!

  • ஆதார் அட்டை எண் - உங்கள் ஆதார் அட்டை QR குறியீடு உங்கள் கணினியில் கிடைக்கக் கூடிய கேமரா பயன்படுத்தி ஸ்கேன் செய்ய வேண்டும் ( உள்ளமைக்கப்பட்ட அல்லது வெளியமைக்கப்பட்ட) . இது உங்கள் கார்டின் பதிவின் போது கட்டாயத் தேவையாகும்.
  • அ - பதிவு எண்ணை உள்ளிடவும்
  • நியாய விலைக் கடை விவரங்கள் - தங்களது நியாய விலைக் கடை மற்றும் அதன் முகவரியைத் தேர்ந்தெடுக்கவும்
  • கைபேசி எண் - 10 இலக்க செல்லுபடியாகும் கைபேசி எண்ணைக் கொடுக்கவும்
  • கடை குறியீடு - இது எண் மற்றும் எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்
  • குடும்ப அட்டை எண் - செல்லுபடியாகும் வடிவில் அட்டை எண்ணை சேர்க்கவும்

சந்தேகம்  இருந்தால், உதவி மையத்தை  அணுகலாம் ........ 1967/1800 – 425 – 5901

முந்துங்கள்.........!!!

 

Follow Us:
Download App:
  • android
  • ios