நீண்டநாள் இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தில், ரியல் எஸ்டேட் கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா கொண்டுவரப்பட்டது.இதனை தொடர்ந்து, ரியல் எஸ்டேட்டை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைமுறை படுத்த உள்ளது.

இந்த ஆணையத்தின் படி, 800 சதுர மீட்டர் அல்லது 8 வீடுகள் கொண்ட குடியிருப்புகள், வர்த்தக கட்டிடங்கள் என அனைத்தும் இதில் பதிவு செய்யப்படும்.

இதன் முக்கிய அம்சம் :

கட்டுமான நிறுவனங்கள் , வாடிக்கையாளர் அளித்த பணத்தில் 70 சதவீத தொகையை வங்கியில் தனி கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும்.

இந்த பிரத்யேக வங்கி கணக்கில் டெபாசிட் செய்த பணத்தை கட்டுமான செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது வெளிப்படை தன்மையையும் உறுதி செய்கிறது.

ரியல் எஸ்டேட் மசோதா, வீடு வாங்குவோருக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், நம்பக தன்மை அதிகரிக்கும் என்கிறது.

இது குறித்து, விதிமுறைகள் அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.மேலும் இது தொடர்பான சட்டம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என்று செய்திகள் தெரிவிகின்றன .