Asianet News TamilAsianet News Tamil

national pension scheme : இனி நேரில் வரவேண்டாம்! ஆன்-லைனில் தேசிய பென்ஷன்(NPS) திட்டம்: அஞ்சல்துறை அறிவிப்பு

NPS national pension scheme: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் இனிமேல் அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. ஆன்-லைனில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை இணைத்து கணக்கு தொடங்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

national pension scheme:  Department of Posts starts providing NPS services through online mode
Author
New Delhi, First Published Apr 29, 2022, 12:03 PM IST

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்புவோர் இனிமேல் அஞ்சல் அலுவலகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை. ஆன்-லைனில் விண்ணப்பித்து தேவையான ஆவணங்களை இணைத்து கணக்கு தொடங்கலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அனைத்துக் குடிமக்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(PFRDA) மூலம் கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்திய அஞ்சல்துறை குறிப்பிட்ட சில தபால்நிலையங்களில் மட்டும் செயல்படுத்தி வருகிறது.

national pension scheme:  Department of Posts starts providing NPS services through online mode

இந்தக் கணக்கு தொடங்குவோர் இதுவரை நேரில் சென்றுதான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கணக்கு தொடங்கவேண்டியது இருந்தது. ஆனால், 2022, ஏப்ரல் 26ம் தேதி முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆன்-லைனில் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அஞ்சல் துறை அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

18வயதுநிரம்பிய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இ்ந்தத் திட்டத்தின் வயது உச்சவரம்பு 70வயதாகும். இந்திய அஞ்சல் துறையின் இணையதளத்துக்குச் சென்று, அதில் நேஷனல் பென்ஷன் சிஸ்டம்-ஆன்லைன் சர்வீஸ் என்ற மெனுவை க்ளிக் செய்து அதில் சேர முடியும்.

national pension scheme:  Department of Posts starts providing NPS services through online mode

இந்த தளத்தில் புதிதாக பதிவு செய்தல், பங்களிப்பு, சிப்(Sip) ஆகியவை என்பிஎஸ் திட்டத்தில் உள்ளன. அனைத்து சேவைகளுக்கும் குறைந்தபட்ச கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள், வருமானவரிச் சட்டம் 80சிசிடி1(பி) பிரிவின் கீழ் வரிக்கழிவு பெற முடியும். 

குறைந்தபட்ச சேவைக் கட்டணத்துடன், அஞ்சல்அலுவலகத்துக்கு நேரில் வராமல், ஆன்-லைன் மூலம் தகுதியுள்ள அனைவரும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பலன் பெறுங்கள் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios