TATASONS:நாமக்கல் தமிழர் டாடா குழுமத்தின் தலைவர்: 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன்(வயது58) 2-வது முறையாக, அடுத்த 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தின் நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன்(வயது58) 2-வது முறையாக, அடுத்த 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று நடந்த நிலையில் அதில் ஒருமனதாக எடுக்கப்பட்டது.2012ல் டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரி நீ்க்கப்பட்டதைதத் தொடர்ந்து, புதிய தலைவராக கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தைச்சேர்ந்த நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
கடந்த 1963-ம் ஆண்டு மோகனூரில் பிறந்த சந்திரசேகரன், தனது பள்ளிக்காலத்தில் நாள்தோறும் தினசரி 3 கிமீ தொலைவு நடந்தே சென்று தமிழ் வழிக்கல்வியில் பயின்றார். அதன்பின் திருச்சி ஆர்.இ.சி. பொறியியல் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். கடந்த 1987-ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போதே சந்திரசேகரன் சேர்ந்துவிட்டார். ஏறக்குறைய 30ஆண்டுகள் டிசிஎஸ் நிறுவனத்தில் அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
அதன்பின் கடந்த 2016ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். கடந்த 5ஆண்டுகளில் டாடா சன்ஸ் குழுமம் பல்வேறு பிரிவுகளில் நன்கு வளர்ச்சி பெற்றது, சந்திரசேகரன் நிர்வாகத்திறமைகுறித்து வாரியக்குழு நிர்வாகிகள் அனைவருக்கும் மனநிறைவு இருந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று நடந்த டாடா சன்ஸ் நிர்வாகக்குழு கூட்டத்தில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சந்தை மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் தலைவராக 2-வது முறையாக சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நிறுவனத் தலைவர் ரத்தன் என் டாடா சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். சந்திரசேகரன் தலைமையில் டாடா சன்ஸ் நிறுவனம் செயல்படும் விதம், நிர்வாகத்தை நடத்தும் முறை ஆகியவை குறித்து ரத்தன் டாடா மனநிறைவு தெரிவித்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் டாடா சன்ஸ் குழுமத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தலைவராக என். சந்திரசேகரை தலைவராக மீண்டும் நியமிக்க ஒருமனதாகஆதரவு தெரிவித்ததால், 2-வது முறையாக அடுத்த 5ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் வெளியிட்ட அறிவிப்பில், “ டாடா சன்ஸ் குழுமத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழிநடத்த ஒருமனதாக அனைத்து உறுப்பினர்களும் என்னை 2-வதுமுறையாகத் தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய மகிழச்ச்சிக்குரியது. ஏற்கெனவே 5 ஆண்டுகள் வழிநடத்த எனக்கு மிகப்பெரியவாய்ப்பும், பெருமையையும் வழங்கினார்கள்”எ னத் தெரிவித்துள்ளார்.