ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் அதி சொகுசு ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். இதன் விலை தெரிந்தால் அனைவரும் வாயைப்பிளப்பார்கள்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் அதி சொகுசு ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் காரை வாங்கியுள்ளார். இதன் விலை தெரிந்தால் அனைவரும் வாயைப்பிளப்பார்கள்.

இந்திய ரூபாயின் மதிப்பின்படி இந்த காரின் விலை ரூ.13.14 கோடியாகும். இந்தியாவிலேயே இந்த கார்தான் விலை அதிகமான கார் என்பது கூடுதலாக சிறிதுநேரம் வாயைப் பிளக்க வைக்கும் தகவலாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு கல்லினன் பெட்ரோல் ரக காரை அறிமுகம் செய்தது. அப்போது இந்த காரின் தொடக்கவிலை ரூ.7 கோடி ஆனால், தற்போது காலத்துக்கு ஏற்ப, வசதிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் சேர்த்தால் ரூ.13.14 கோடியாக அதிகரித்துள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள டார்டியோ போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த மாதம் 31ம் தேதி இந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இந்தகார்தான் விலை அதிகமானது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரோல் ராய்ஸ் கல்லிலன் எஸ்யுவி கார் டஸ்கான் சன்(சிவப்பு ஷேட்) நிறத்தில் இருக்கிறது. 12 சிலிண்டர்கள் கொண்டதாகவும், 2.5 டன் எடை கொண்டதாகவும் கல்லினன் கார் வடிவமைக்கப்பட்டது. இந்த காரின் வேகம் 564 பிஹெச்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காருக்காக ஒருமுறை செலுத்தும்வரியாக 2037ம் ஆண்டுவரை ரூ.20 லட்சம் வரி செலுத்தப்பட்டுள்ளது, சாலைபாதுகாப்பு வரியாக ரூ.40ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது

விஐபி நம்பர் பிளேட்டுக்காக ரிலையன்ஸ் நிறுவனம் தனியாக ரூ.12 லட்சம் செலுவிட்டு, “0001” என்ற எண்ணை வாங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

வழக்கமாக விஐபி கார் நம்பர் வாங்குவதற்காக ரூ4 லட்சம் செலவிடுவார்கள்.ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கிய எண்ணின் வரிசை முடிந்திருந்தாலும், கூடுதலாக செலவிட்டு புதிய சீரிஸை தொடங்கி, இந்த எண்ணை வாங்கியுள்ளனர்

இந்த கல்லினன் ரக காரை ஏற்கெனவே சில தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் வைத்திருந்தாலும் இந்த அளவு விலை உயர்வானது இல்லை. சமீபத்தில் மோரிஸ் கேரேஜ்நிறுவனத்தின் கிளாஸ்டர் மாடல் காரையும், பிஎம்டபிள்யு காரையும் முகேகேஷ் அம்பானி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸாருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது