ஆகாஷ் அம்பானி வாங்கிய புதிய புல்லட்ப்ரூஃப் மெர்சிடிஸ் சொகுசு கார்! விலை இத்தனை கோடியா?
ஆகாஷ் அம்பானி, ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பெயர் பெற்றவர், விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பர மாளிகையில் வசிக்கிறார். அவர் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் மற்றும் பல ஆடம்பர கார்களை வைத்திருக்கிறார்.
ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவர். முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனது. தங்களின் ஆடம்பர பொருட்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை மூலம் அம்பானி குடும்பத்தினர் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. மறுபுறம் தனித்துவமான ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த நகைகள் மூலம் அம்பானி குடும்ப பெண்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி - இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் மூவருக்குமே திருமணமாகி விட்டது. கடந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்தது.
ரூ.451 கோடி நெக்லஸ் முதல் ரூ.240 கோடி ஜெட் வரை: அம்பானி குடும்பத்தின் ஆடம்பர பரிசுகள்!
முகேஷ் மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி, ஆடம்பரமான வீட்டில் வாழ்வது மற்றும் விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பது போன்ற ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர். அவரது மனைவி ஷ்லோகா மேத்தாவும் ஒரு பணக்கார குடும்பத்தில் இருந்து வந்தவர், வைரத் தொழிலில் இருந்த ஆர்வம் அவரது தந்தை ரஸ்ஸல் மேத்தாவின் நிகர மதிப்பை 225 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் அம்பானி தனது சகோதரி இஷா மற்றும் தனது மனைவி ஷ்லோகா மேத்தா ஆகியோருடன் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் டிராப்ஹெட் கூபே காரில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.. .
சமீபத்தில், ஆகாஷ் அம்பானி, பிரதம மந்திரிகள் மற்றும் ஜனாதிபதிகள் உட்பட உலகத் தலைவர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு குண்டு துளைக்காத வாகனமான அதி-ஆடம்பரமான Mercedes S680 காரில் பயணித்தார்.. இந்த ஆடம்பர ந்த உயர் ரக காரின் விலை ரூ.15 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் மட்டுமின்றி வேறு சில ஆடம்பர கார்களையும் அவர் வைத்திருக்கிறார்.
திவாலான தந்தையின் வணிக சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்த மகன்கள்; அனில் அம்பானியின் மகன்கள் பற்றி தெரியுமா?
ஆகாஷ் அம்பானியின் கார் சேகரிப்பில் கார்கள் என்னென்ன?
லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) : நகரத்தில் பயணம் செய்வதற்கும் வார இறுதி பயணங்களுக்கும் சிறந்த செயல்திறன் கொண்ட, நேர்த்தியான கார் ஆகும்.
பென்ட்லி பென்டேகா (Bentley Bentayga) : ஒரு சொகுசு கார்
ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) : : ஒரு சொகுசு கார்
BMW 5-சீரிஸ் (BMW 5-Series) ஒரு சொகுசு கார்
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கூப் (Rolls Royce Phantom Drophead Coupé): ஒரு சொகுசு கார்
அம்பானி குடும்பம் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கிறது. அம்பானி குடும்ப உறுப்பினர்களின் ஃபேவரைட் கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் ஒன்றாகும்.
ஆகாஷ் மற்றும் ஷ்லோகா தற்போது ஆன்ட்டிலியா என்ற ஆடம்பர மாளிகையில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். 27 மாடிகள், மூன்று ஹெலிபேடுகள், ஒன்பது லிஃப்ட்கள், 50 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் மற்றும் 168 கார்கள் இருக்கக்கூடிய கேரேஜ் ஆகியவற்றைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வீடு இதுவாகும். செழுமையான சொத்தில் மாடித் தோட்டங்கள், நீச்சல் குளங்கள், ஸ்பா மற்றும் சுகாதார மையம் என பல ஆடம்பர வசதிகள் உள்ளன. மேலும் அவர்களின் வீட்டில் பனி அறையும் உள்ளது. உலகின் ஆடம்பர வீடுகளில் ஒன்றாக கருதப்படும் அம்பானி வீட்டின் விலை 15,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.