Adani vs Ambani: உலக பணக்காரர் பட்டியலில் அதோ கதியான அதானி! மீண்டும் முதல் இடத்தில் அம்பானி!
அதானி குழு நிறுவனர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதானி குழு நிறுவனர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த சில நாட்களில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் விளைவாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி குழுமம் விரிவான பதிலை அளித்து இருந்த நிலையிலும், அதானி குழும நிறுவனங்களின் பங்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.
இதனால், உலக கோடீஸ்வரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கெளதம் அதானி ஓரேயடியாக கீழே சரிந்து 16வது இடத்துக்கும் வீழ்ந்துவிட்டார். இன்று ஒருநாளில் மட்டும் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 23.8 பில்லியன் டாலர் குறைந்து 69.6 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
Adani Group RBI: அதானி குழுமத்துக்கு எவ்வளவு கடன் கொடுத்தீங்க! வங்கிகளிடம் விளக்கம் கேட்கும் ஆர்பிஐ
இதனால் மற்றொரு இந்தியத் தொழிலதிபரான ரிலையன்ஸ் குழும நிறுவனர் முகேஷ் அம்பானி அதானியை முந்தி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக மாறியுள்ளார். உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். தற்போது அவரது சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலராக உள்ளது.
இதனிடையே, உள்நாட்டு வங்கிகள் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த விவரங்களை ரிசர்வ் வங்கி கோரியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்ட பொதுப்பங்குகள் (FPO) அனைத்தும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு விற்பனையானது. ஆனால், அவற்றைத் திரும்பப் பெற்று பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுக்க உள்ளது.
Adani FPO: அதானி என்டர்பிரைசஸ் FPO திடீர் வாபஸ்: முதலீட்டாளர்களிடம் பணத்தை திரும்ப அளிக்க முடிவு