car insurance: irda: மோட்டார் வாகனக் காப்பீட்டில் புரட்சி: 3 வித புதிய பாலிசி: விதிகளில் புதிய மாற்றம்

மோட்டார் வாகனக் காப்பீட்டில் புதிய புரட்சி வர இருக்கிறது. இனிமேல் ஒரே மாதிரியான வாகனக் காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக தொழில்நுட்ப அடிப்படையில் காப்பீடு செலுத்தும் புதிய திட்டத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(irda) கொண்டு வருகிறது.

motor insurance rules to change:   premiums based on vehicle usage: how you drive

மோட்டார் வாகனக் காப்பீட்டில் புதிய புரட்சி வர இருக்கிறது. இனிமேல் ஒரே மாதிரியான வாகனக் காப்பீடு ஒவ்வொரு ஆண்டும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதிலாக தொழில்நுட்ப அடிப்படையில் காப்பீடு செலுத்தும் புதிய திட்டத்தை இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(irdai) கொண்டு வருகிறது.

motor insurance rules to change:   premiums based on vehicle usage: how you drive

இந்தத் திட்டத்தின்படி, வாகன் ஓட்டுவரின் டிரைவிங் ஹிஸ்டரி அதாவது எவ்வாறு வாகனத்தை இயக்குகிறார், வேகத்தில் இயக்குகிறார், சாலைவிதிகளைப் பின்பற்றுகிறாரா ஆகியவற்றின் அடிப்படையிலும், வாகனத்தின் பயன்பாட்டின்அடிப்படையிலும் காப்பீடு செலுத்தினால் போதுமானது

உதாரணமாக அதிகமாக வாகனத்தை பயன்படுத்துவோருக்கு காப்பீடு தொகை அதிகமாகவும், குறைவாகப் பயன்படுத்துவோருக்கு குறைவாகவும் காப்பீடு தொகை இருக்கும். இந்த மோட்டார் வாகனக் காப்பீடு திட்டம் கார், லாரிகள், வேன்களுக்கு மட்டுமல்ல இரு சக்கரவாகனங்களுக்கும் பொருந்தும்.

இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: 

motor insurance rules to change:   premiums based on vehicle usage: how you drive

தொழில்நுட்ப அடிப்படையில் காப்பீடு வழங்கப்பட உள்ளது. காப்பீடு நிறுவனங்கள் தொழில்நுட்ப அடிப்படையில் மோட்டார் வாகனக் காப்பீடு வழங்கலாம். அதாவது, வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ப கட்டணம் (pay as you drive), எவ்வாறு வாகனம் இயக்குகிறார்கள் (pay how you drive) ஏற்ப காப்பீட்டை தேர்ந்தெடுக்கலாம். 

 ஓட்டுவதற்கு ஏற்ப கட்டணம்(pay as you drive)

வாகனம் ஓட்டுவற்கு ஏற்ப காப்பீடு கட்டணம் என்பது, வாகனத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு செலுத்துவதாகும். உதாரணமாக தற்போது 1500 சிசி கார்கள் அனைத்தும் ஒரே மாதிரியான காப்பீடுதான். ஆனால் சிலர் வாகனத்தை அதிகமாகப் பயன்படுத்துவோருக்கும் அதே கட்டணம், வாரத்துக்கு ஒருமுறை இயக்குபவருக்கும் அதே கட்டணம்தான். ஆனால்இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் மாறுபடும். இதற்கு வாகனத்தின் ஜிபிஎஸ் உதவியுடன் ஆண்டுக்கு எத்தனை கிலோமீட்டர்கள் பயணிக்கிறோம் என்ற அடிப்படையில் கட்டணம் மாறுபடும்

motor insurance rules to change:   premiums based on vehicle usage: how you drive

எவ்வாறு வாகனம் இயக்குகிறார்கள் (pay how you drive)

வாகனத்தை எவ்வாறு இயக்குகிறோம் என்பதன் அடிப்படையில் காப்பீடு கட்டணம் மாறுபடும். வாகனம் ஓட்டுபவரின் செயல்பாடுகளை கண்காணிக்க இதில் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதாவது, வாகனத்தைஇயக்கும் வேகம், பயன்பாடு, சாலைவிதிகளை மதித்தல் ஆகியவற்றுக்கு ஏற்பட கட்டணம் நிர்ணயிக்கப்படும். 

ப்ளோட்டர் பாலிசி(floater policy)

ஒரு தனிநபர் ஒரு வாகனத்துக்கு மேல் அதிகமாக வைத்திருந்தால், உதாரணமாக இரு இரு சக்கர வாகனம், கார், வேன் என பலவற்றை வைத்திருந்தால், அனைத்துக்கும் தனித்தனியாக காப்பீடு எடுக்கத் தேவையில்லை. அனைத்துக்கும் சேர்த்து ஒரே காப்பீடாக எடுக்கலாம்.

motor insurance rules to change:   premiums based on vehicle usage: how you drive

புதிய மாற்றத்தால் என்ன பயன்

இதற்கு முன் ஓட்டுநர்களின் தரத்தை பிரித்துப் பார்ப்பதற்கு எந்த வசதியும் இல்லை ஆனால், இந்த காப்பீடு முறை வந்துவிட்டால் ஓட்டுநர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். சரியான ஓட்டுநர்களுக்கு அதிகமான வெகுமதி அளிக்கப்படும். 

சிறந்த ஓட்டுநர்கள், மோசமான ஓட்டுநர்கள் யார் என்பதை அவர்களின் டிரைவிங்கை வைத்து தரம் பிரிக்க முடியும். சிறந்த ஓட்டுநர்களுக்கு காப்பீடு ப்ரீமியம் குறைவாகவும், மோசமான ஓட்டுநர்களுக்கு ப்ரீமியம் அதிகமாகவும் இருக்கும் 

motor insurance rules to change:   premiums based on vehicle usage: how you drive

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டிஏ ராமலிங்கம் கூறுகையில் “ ஐஆர்டிஏ மோட்டார் காப்பீட்டில் கொண்டுவர இருக்கும் மாற்றத்தின் மூலம், காப்பீடு எடுக்கும் செலவு குறையும். வாகனத்தை இயக்கும் முறைக்கு ஏற்ப காப்பீடு ப்ரீமியம் வசூலிக்கப்படும் என்பது மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு. பயன்பாட்டுக்கு ஏற்ப காப்பீடு ப்ரீமியம் என்பதால், தேவையின்றி யாரும் வாகனத்தை இயக்கமாட்டார்கள். அவசியத்துக்காக மட்டுமே எடுப்பார்கள். 

உதாரணமாக இரு ஓட்டுநர்கள் ஆண்டுக்கு 10ஆயிரம் கிலோமீட்டர்கள் வாகனத்தை இயக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் இதில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்கிய ஓட்டுநருக்கு காப்பீடு ப்ரீமியம் குறையும், வாகனத்தை கண்டபடி இயக்கியஓட்டுநருக்கு காப்பீடு ப்ரீமியம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios