Asianet News TamilAsianet News Tamil

MG electric vehicle : 400 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது EV கார் உருவாக்கும் எம்.ஜி. மோட்டார்ஸ்

MG electric vehicle : எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.

MG previews new EV hatchback
Author
Tamil Nadu, First Published Mar 2, 2022, 12:23 PM IST

எம்.ஜி. மோட்டார்ஸ் நிருவனம் இந்த ஆண்டின் நான்காவது காலாண்டு வாக்கில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலின் பிரீவியூவை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி, புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் தெரியவந்துள்ளது. முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக உருவாகி இருக்கும் இந்த மாடல் அளவில் 4300mm நீளமாக இருக்கிறது.

தற்போதைய தகவல்களின் படி இந்த மாடல் ஃபோக்ஸ்வேகன் ID.3 மற்றும் கியா இ-நிரோ போன்ற மாடல்களுக்கு மாற்றான  எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு தற்போதைய ZS EV மற்றும் எம்.ஜி. 5 EV மாடல்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதன் முன்புறத்தில் ராப்-அரவுண்ட் லைட் பார், புதிய வீல் டிசைன்கள், விங் மிரர்கள் உள்ளன.

MG previews new EV hatchback

புதிய மாடல் அளவுகள் தற்போதைய எம்.ஜி. 3 மாடலுடன் கச்சிதமாக பொருந்துகின்றன. இந்த மாடலுக்கு மாற்றாகவே புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் மட்டுமின்றி சைபர் பேனரின் கீழ் பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய எம்.ஜி. மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. புதிய கார் 5 EV மாடலை போன்றே காட்சியளிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதன் முன்புறத்தில் 154 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்தும் மோட்டார் பொருத்தப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை ஏழு நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட இருக்கும் 57.7 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர்  வரை செல்லும் என எதிர்பார்க்கலாம். 

இந்திய சந்தையில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்யும்  பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் மேம்பட்ட ஸ்டைலிங், அதிக அம்சங்கள் மற்றும் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios