mehul choksi wife :பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13ஆயிரம கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பி ஓடிய வைரவியாபாரி மெகுல் சோக்ஸி, அவரின் மனைவி பிரித்தி உள்ளிட்ட பலர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13ஆயிரம கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பி ஓடிய வைரவியாபாரி மெகுல் சோக்ஸி, அவரின் மனைவி பிரித்தி உள்ளிட்ட பலர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றச்சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.
மெகுல் சோக்ஸியின் மனைவி பிரித்தி பிரத்யோத்குமார் கோத்தாரி எதிராக அமலாக்கப்பிரிவின் முதல் நடவடிக்கையாகும்.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் தனது கணவருக்கு உதவியதற்காக ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றவழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாகக்ப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றப்பத்திரிகையில் மெகுல் சோக்ஸி நடத்திய கீதாஞ்சலி ஜெம்ஸ், கில்லி இந்தியா, நக்சத்திரா ஆகிய நிறுவனங்கள் பெயரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மெகுல் சோக்ஸிக்கு எதிராக அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்யும் 3-வது குற்றப்பத்திரிகையாகும். இதற்கு முன் 2020, 2018ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மெகுல் சோக்ஸி, அவரின் மனைவி பிரீத்தி இருவரும் மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஆன்டிகுவாவில் வசிக்கிறார்கள். அவர்களை நாடு கடத்தி தாயகம் அழைத்துவர அமலாக்கப்பிரிவு முயன்று வருகிறது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இருவரும் ஆன்டிகுவாவில் வசித்து வருகிறார்கள்.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில் “ மெகுல் சோக்ஸியுடன் தொழிலில் நெருக்கமாக இருந்த அவரின் மனைவி ப்ரீத்திக்கு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பிருக்கிறது. கணவரிடம் இருந்து பெற்ற பணத்தை சட்டவிரோதமாக எங்கு வைத்துள்ளார், எப்படி கொண்டு சென்றார் என்பது குறித்த விவரங்கள் நன்கு அறியும்.
அதுமட்டுமல்லாம்ல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹில்லிங்டன் ஹோல்டிங்ஸ், சாட்டிங் கிராஸ் ஹோல்டிங்ஸ், கோலிங்டேன் ஹோல்டிங்ஸ் ஆகிய 3 நிறுவனங்களில் இருந்து அதிக பலன் பெற்றவரும் சோக்ஸியின் மனைவிதான்”எ னத் தெரிவித்துள்னர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்ஸி, அவரின் மனைவி ப்ரீத்தி இருவரும் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ஆன்டிகுவாவில் வசித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் மெகுல் சோக்ஸி சட்டவிரோதமாக டோமினிக்கா நாட்டுக்குள் நுழைந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் மீதான குற்றச்சாட்டை டோமினிக்கா அரசு சமீபத்தில் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.
