mastercard :மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த 11 மாதத் தடையை ரிசர்வ் வங்கி நேற்று விலகிக்கொண்டது. இனிமேல் டெபிட் மற்றும் கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகளுக்காக புதிய வாடிக்கையாளர்களை மாஸ்டர்கார்டு நிறுவனம் சேர்க்கத் தடையில்லை

மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த 11 மாதத் தடையை ரிசர்வ் வங்கி நேற்று விலகிக்கொண்டது. இனிமேல் டெபிட் மற்றும் கிரெடிட், ப்ரீபெய்டு கார்டுகளுக்காக புதிய வாடிக்கையாளர்களை மாஸ்டர்கார்டு நிறுவனம் சேர்க்கத் தடையில்லை

வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்துவைத்திருந்ததால் போதுமான பாதுகாப்பு விதிகளையும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஆண்டு ஜூலை மாதம் மாஸ்டர்கார்டு நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது.

இதன்படி, மாஸ்டர்கார்டு நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் தடைவிதித்தது. இந்தத் தடையை நேற்று ரிசர்வ் வங்கி உடனடியாக விலக்குவதாக அறிவித்தது. 

இந்த தடைவிலக்கத்தால் யெஸ்வங்கி, ஆர்பிஎல் வங்கி ஆகியவை மிகுந்த பயன்பெறும். ஏனென்றால், இந்த இரு வங்கிகளும் மாஸ்டர்கார்டு மட்டும்தான் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வினியோகித்து வந்தன. சிட்டி வங்கியும் மாஸ்டர்கார்டுடன் இணைந்து வழங்கி வந்தது. இந்த தடை விலக்கத்தால் இந்த வங்கிகள் பயன் பெறும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டஅறிவிப்பில் “ மாஸ்டர்கார்டு ஆசிய, பசிபிக் லிமிட் ரிசர்வ் வங்கியின் விதிகளை முழுமையாக கடைபிடிப்பது திருப்தியளிக்கிறது. வாடிக்கையாளர்கள் பேமெண்ட் டேட்டா, விவரங்கள் பாதுகாப்பது முழுமையாக ரிசர்வ் வங்கி விதியின் கீழ் இருக்கிறது. ஆதலால், 2021, ஜூலை 14ம் தேதிவிதிக்கப்பட்ட தடையை உடனடியாக விலக்குகிறோம். புதியவாடிக்கையாளர்களை மாஸ்டர்கார்டு சேர்க்கலாம்.” எனத் தெரிவித்துள்ளது.

மாஸ்டர்கார்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ ரிசர்வ் வங்கி தடைவிலக்கியதை வரவேற்கிறோம். இந்தியாவின் டிஜிட்டல் தேவை, மக்கள், வர்த்தகத்தின் தேவை கருதி, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுவோம். எங்களின் இலக்குகளை அடைந்திருக்கிறோம். தொடர்ந்து எதிர்கால இலக்குகளை உருவாக்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுவோம்.இந்தியா எங்களுக்கு முக்கியமான சந்தை, புதிதான திட்டங்கள் அறிமுகம் செய்யமுடியும், மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுடன் தொடர்பும் கிடைக்கும்” எனத் தெரிவி்த்தது.

இந்தியாவில் மாஸ்டர்கார்டு, விசா,ரூபே ஆகிய 3 மிகப்பெரிய பேமெண்ட் சிஸ்டம் ஆப்ரேட்டர்கள் உள்ளனர். கார்டுகளுக்கான சந்தையில் விசா மிகப்பெரிய இடத்தையும் அதைத் தொடர்ந்து மாஸ்டர்கார்டு, ரூபேவும் உள்ளன.