மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் தனது டிசையர் மாடலின் CNG வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மாருதி சுசுகி நிறுவனம் ஆண்டு துவக்கம் முதலே புதிய மற்றும் மேம்பட்ட மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது டிசையர் மாடல் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டிசையர் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்ற போதிலும், இம்முறை CNG ஆப்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதிய மாருதி சுசுகி CNG வேரியண்ட் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் டிசையர் மாடல் K12M டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் CNG கிட் பெறும் இரண்டாவது மாடலாக டிசையர் இருக்கும். முன்னதாக மேம்பட்ட வேகன்ஆர் மாடலின் இதே என்ஜினுடன் CNG ஆப்ஷன் வழங்கப்பட்டது.

முன்னதாக வாடகை டாக்சி பயன்பாட்டுக்கு மட்டுமே CNG ஆப்ஷன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த ஆப்ஷனை வழங்க மாருதி சுசுகி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிசையர் மட்டுமின்றி மாருதி சுசுகி நிறுவனம் மேலும் சில CNG கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. 

இந்திய சந்தையில் மாருதி சுசுகி டிசையர் CNG மாடல் ஹோண்டா அமேஸ் CNG, ஹூண்டாய் ஆரா CNG மற்றும் டாடா டிகோர் CNG போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

முன்னததாக மாருதி சுசுகி நிறுவனம் புதிய செலரியோ, பலேனோ மாடல்களையும், மேம்பட்ட வேகன்ஆர் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் டிசையர் CNG மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டிசையர் CNG மாடலை தொடர்ந்து ஸ்விஃப்ட் CNG மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.