Asianet News TamilAsianet News Tamil

Share MarketToday ! 2023-முதல் வாரமே பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் சொத்து ரூ.4 லட்சம் கோடி அம்போ!

2023ம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் வாரமே மும்பை மற்றும் தேசியப் பங்குச்ரத்தக்களறியானது. முதல்வாரத்திலேயே பங்குசந்தையில் சென்செக்ஸ், நிப்டி 2 சதவீதம் சரிந்தன.

Market losses reach 4 lakh crore in the first week of 2023.
Author
First Published Jan 7, 2023, 2:06 PM IST

2023ம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் வாரமே மும்பை மற்றும் தேசியப் பங்குச்ரத்தக்களறியானது. முதல்வாரத்திலேயே பங்குசந்தையில் சென்செக்ஸ், நிப்டி 2 சதவீதம் சரிந்தன.

முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு முதல்வாரத்திலேயே ரூ.4 லட்சம் கோடி குறைந்தது. அதுமட்டுமல்லாமல் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 60ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்து, 59ஆயிரம் என்ற அளவுக்குள் சரிந்தது. நிப்டியும், 17ஆயிரம் புள்ளிகளுக்குள் வந்தது.

ரத்தக்களறியான பங்குச்சந்தை! சென்செக்ஸ் 60ஆயிரம் புள்களுக்கு கீழ்சரிவு, நிப்டி வீழ்ச்சி

2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் மும்பைபங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,141 புள்ளிகளை அதாவது 1.87 சதவீதத்தை இழந்துள்ளது. நிப்டியி்ல 242.45 புள்ளிகள் அதாவது 1.34 சதவீத்தை இழந்துள்ளது.

முதல்வாரத்திலேயே முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு ரூ.4.02 லட்சம் கோடி குறைந்து, ரூ.279.78 கோடியாகக் குறைந்தது. அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தலைமை வங்கியான பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற செய்தி முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால், தொடர்ந்து இரு நாட்களாக பங்குச்சந்தையில் வீழ்ச்சி காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்கள் 3வது காலாண்டில் இழப்பை சந்திக்கலாம் என்ற அச்சத்துடன் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

கேஒய்சி அப்டேட் செய்ய வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம்: ஆர்பிஐ புதிய அறிவிப்பு

அதிலும் கடந்த 3வது காலாண்டில் ஐடி நிறுவனங்கள் பெரும் சவாலாச் சந்தித்தன. நிப்டியில் டிசிஎஸ் நிறுவனம் 3 சதவீதம் இழப்பைச் சந்தித்தது, இன்போசிஸ் 1.74 சதவீதமும், டெக் மகிந்திரா 2.54 சதவீதமும் இழப்பைச் சந்தித்தன.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத்தை உயர்த்தும் என்பதால், இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த வாரத்தில் மட்டும் ரூ.2,902 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 
வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 452 புள்ளிகள் சரிந்து, 59,900 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 132புள்ளிகள் சரிந்து, 17,859 புள்ளிகளில் நிலைபெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios