90 மணிநேர வேலை சர்ச்சை: ஜொமேட்டோவின் வெற லெவல் ரெஸ்பான்ஸ்!
எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தேவையா என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல நகைச்சுவையான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தேவையா என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சமூக ஊடகங்களில் பலவிதமான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.
பலரும் நகைச்சுவையான பதில்களைக் கூறி வருகின்றனர். வேலை நெறிமுறைகள் குறித்த தீவிரமான விவாதமும் நடந்து வருகிறது. பலர் மீம் மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, மனைவியைப் பார்த்துக்கொண்டே இருப்பதை வைத்து பல பதிவுகள் காணப்படுகின்றன.
பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எல்&டி தலைவர் சுப்பிரமணியன், ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளை ஓய்வு நாளாகக் கருத வேண்டும் என்றும் கூறினார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்து மனைவியைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்குப் பதிலாக வேலையைச் செய்யலாமே என அவர் பேசியது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
EPFO பென்ஷன்: 10 வருட வேலைக்குப் பின் எவ்வளவு கிடைக்கும்?
இது தொடர்பாக ஆன்லைன் உணவு டெலவரி தளமான ஜொமேட்டோ (Zomato) ஒரு நகைச்சுவையான பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. "உங்களுக்கு மனைவி இல்லையென்றால், ஜொமேட்டோ ஆப்பில் வந்துகொண்டிருக்கும் உங்கள் ஆர்டரைப் பார்க்கலாம்" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
சுப்பிரமணியனின் கருத்துக்களில் உள்ள நகைச்சுவை பயனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஜெமேட்டோவின் பதிவு வேடிக்கையாக இருந்தாலும், சுப்பிரமணியன் கருத்துக்கு விமர்சனங்களும் வந்துள்ளன. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் அதார் பூனாவாலா போன்ற தொழிலதிபர்கள் பலர் மாறுபட்ட கருத்துகளைக் கூறியுள்ளனர். இருவரும் பணி மற்றும் வாழ்க்கையை சமநிலையில் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர்.
"நான் சமூக ஊடகங்களில் இருப்பது, நான் தனிமையில் இருக்கிறேன் என்பதால் அல்ல. என் மனைவி அற்புதமானவர், நான் அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறேன். அதற்காக அதிக நேரம் செலவிடுகிறேன். எனவே, நான் புதிய நண்பர்களைப் பெறுவதற்காக சோஷியல் மீடியாவுக்கு வருவதில்லை. இது ஒரு அற்புதமான வணிகக் கருவி" என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
"என் மனைவிகூட ஞாயிற்றுக்கிழமைகளில் என்னைப் பார்ப்பதை விரும்புகிறார்" என அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி சம்பாதிக்க சிறந்த வழி! மாதம் 1,000, 2,000 சேமித்தால் போதும்!!
இதற்கிடையில், RPG குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, வாரத்துக்குத் 90 மணிநேர வேலை என்ற கருத்தை நிராகரித்து, பணி மற்றும் வாழ்க்கையில் சமநிலை இருப்பது அத்தியாவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
பஜாஜ் ஆட்டோவின் ராஜீவ் பஜாஜ் கூட, வேலை நேரத்தை அளவிடுவதை விட வேலையின் தரம்தான் முக்கியம்; அதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Shaadi.com இன் நிறுவனர் அனுபம் மிட்டலும் சுப்பிரமணியனின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார். “கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்கவில்லை என்றால், உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக எப்படி உருவாகியிருப்போம்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த EEE திட்டத்தில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் 8 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்!