GST slab: சரக்கு மற்றும் சேவை வரியில் குறைந்தபட்சமாக இருக்கும் 5சதவீதத்தை 8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியில் குறைந்தபட்சமாக இருக்கும் 5சதவீதத்தை 8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அடுத்துவரும் ஜிஎஸ்டிகவுன்சில் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5,12,18,28ஆகிய 5 நிலைகளாக வரி விதிக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சமாக இருக்கும் 5 சதவீதத்தில் 3 சதவீத்தை8 %உயர்த்தவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன்னர், 12 மற்றும் 18 சதவீத வரிவிதிப்பை ஒன்றாக இணைத்து 16 சதவீதவரி என்று கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது ஆனால், அது முடியவில்லை. இதையடுத்து குறைந்தபட்ச வரியை உயர்த்த உள்ளது.
இந்த வரியை உயர்த்துவதன் மூலம் மாநில அரசுகள் மத்திய அரசை நிதிக்காக அதிகமாக சார்ந்திருப்பது குறையும் என்று மத்திய அரசு நம்புகிறது. மேலும், தற்போது 12 சதவீத வரிவிதிப்பில் இருப்பவை அனைத்தும் 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரி என்பது 8% மாக இருக்கும். இதனால் 5 சதவீத வரிவிதிப்புக்குள் இருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் மீதும் 8 சதவீதம் வரிவிதிக்கப்படும் இதனால் அந்தப் பொருட்கள் விலை உயர்ந்து, நடுத்தர, சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.
சர்க்கரை, மளிகைப்பொருட்கள், சமையல் எண்மெய், காபி, நிலக்கரி, உயிர் காக்கும் மருந்துகள், இந்திய இனிப்புகள் ஆகியவை 5 சதவீத வரிவிதிப்புக்குள் வரும் பொருட்களாகும்.

இ்ந்தமாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டத்தில் 5 சதவீத வரியை 8% உயர்த்த அப்போது முடிவு எடுக்கப்படலாம்.
இது தொடர்பாக மாநிலநிதி அமைச்சர்கள் சேர்ந்து தயாரித்த அறிக்கை விரைவில் ஜிஎஸ்டி குழுவில் தாக்கல் செய்யப்படும் வரும் கூட்டத்தில் இந்த அறி்க்கை குறித்து ஜிஎஸ்டி குழு விவாதிக்கும். தற்போதிருக்கம் 5 சதவீதத்திலிருந்து கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தப்படும்போது, அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி ஆண்டுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.
