ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் புதிய ஆதார் அட்டை எவ்வாறு பெறுவதற்கான இரு வழிகள் யுஐடிஏஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் புதிய ஆதார் அட்டை எவ்வாறு பெறுவதற்கான இரு வழிகள் யுஐடிஏஐ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது ஆதார் தொலைந்தபின் அதன் எண் நினைவிருக்கும். ஆனால் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் இருக்காது, சிலருக்கு ஆதார் தொலைந்திருக்கும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்இருக்கும் இவர்கள் எவ்வாறு தொலைந்த ஆதார் அட்டைக்குபதிலாக புதிய ஆதார் பெறுவதற்கான வழிகள் விளக்கப்பட்டுள்ளன.

இன்றைய சூழலி்ல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் சமையல் கியாஸ் இணைப்பு வரை ஆதார் எண் அவசியம். வங்கிக்கணக்கு, வருமானவரிக் கணக்கு,பிஎப் கணக்கு என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்ட நிலையில் அது துரதிர்ஷ்டவசமாக தொலைந்துவிட்டால் எவ்வாறு பெறுவது என்பது குறி்த்த வழிகள் விளக்கப்பட்டுள்ளன

ஆதார் எண்ணைத் தொலைத்துவிட்டால் எவ்வாறு மீட்டெடுப்பது

1. ஆதாரை மீட்டெடுக்க ஆதார் எண் அல்லது பதிவு எண் அல்லது விர்ச்சுவல்ஐடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அவசியம்
2. ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்-அஞ்சல் தேவை

ஆதார் எண்ணும் இருக்கு, ஆதாரில் பதிவு செய்த மொபைல் எண்ணும் இருக்கு அட்டை மட்டும் தொலைந்துவிட்டது எவ்வாறு மீட்டெடுப்பது
ஆதார் எண் நினைவில் இருக்கிறது, பதிவு செய்த மொபைல் எண்ணும் இருக்கிறது என்றால், நேரடியாக http//eaadhhar.uidai.gov.in/#/ தளத்துக்கு நேரடியாக் சென்று ஆதார் அட்டையை பிரின்ட் எடுக்கலாம். அல்லது ஆதார் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, அதிலிருந்து ஆதார் அட்டையை பதவிறக்கம் செய்து இ-ஆதாராக மாற்றி வைக்கலாம்.
ஏடிஎம் கார்டுவடிவத்தில் ஆதார் கார்டு தேவையென்றால், uidai இணையதளத்துக்குச் சென்று ரூ.50பணம் செலுத்தினால், கார்டு வடிவத்தில் ஆதார் கார்டு அனுப்பி வைக்கப்படும்.

உங்களிடம் ஆதார் எண் இருக்கிறது அட்டை தொலைந்துவிட்டது, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லை எவ்வாறு ஆதார் அட்டை பெறுவது?

1. uidai.gov.in அல்லது resident uidai.gov.in என்ற தளத்துக்குச்செல்ல வேண்டும்
2. ஆர்டர் ஆதார் கார்டு சேவை தளத்துக்குள் செல்ல வேண்டும்
3. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும், 16 இலக்க விஐடி எண்அல்லது 28இலக்க பதிவு எண்ணை பதிவிட வேண்டும்
4. செக்யூரிட்டி கோடை பதிவிட வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்இல்லாவிட்டால், அதில் உள்ள பாக்ஸில் கிளிக் செய்து, வேறு மொபைல் எண்ணை பதிவிடலாம்.
5. பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும்
6. ஓடிபி எண்ணை பதிவிட்டு, சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்
7. பேமெண்ட் பகுதியை க்ளிக் செய்தால், பேமெண்ட் கேட்வே பகுதிக்குச்செல்லும் அதில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தை வங்கிக்கணக்கு அல்லது யுபிஐ, டெபிட், கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும்.

ஆதார் எண் இல்லை, ஆனால், பதிவு செய்த மொபைல் இருக்கிறது. அப்போது எப்படி ஆதார் கார்டு பெறுவது

resident uidai.gov.in தளத்தில் சென்று அல்லது ஆதார் செயலியில் சென்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் ஓடிபி எண் வரும். அதை பதிவிட்டால், ஆதார் எண் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.அதன்பின் பிவிசி கார்டு வடிவில் அல்லது காகிதத்திலோ, மொபைலிலோ ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.