டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் லிமிடெட் எடிஷன் மாடல் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது ஃபார்ச்சூனர் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை தாய்லாந்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஃபார்ச்சூனர் கமாண்டர் லிமிடெட் எடிஷன் என அழைக்கப்படும் புது மாடல் மொத்தத்தில் ஆயிரம் யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த மாடலில் ஏராளமான காஸ்மெடிக் மாற்றங்களும், சஸ்பென்ஷன் ரி-டியூன் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த காரின் பின்புறம் உள்ள குரோம் டி-டெயிலிங் பிளாக்டு அவுட் செய்யப்பட்டு உள்ளது. உள்புறம் ஃபார்ச்சூனர் கமாண்டர் மாடலில் டூயல் டேன் டார்க் ரெட் மற்றும் பிளாக் லெதர் மெத்தை வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாடலில் 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மாணிட்டர் மற்றும் ரியர் கிராஸ்-டிராஃபிக் அலெர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபார்ச்சூனர் லிமிடெட் எடிஷன் மாடலின் என்ஜின் மற்றும் கியர்பாக்சில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஃபார்ச்சூனர் கமாண்டர் மாடலில் 2.4 லிட்டப் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் ஃபார்ச்சூனர் மாடல் 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் 2.8 லிட்டர் ஆப்ஷனுடன் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக ஃபார்ச்சூனர் ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனினும், இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது டொயோட்டா நிறுவனம் கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
