Asianet News TamilAsianet News Tamil

ஐபிஓவுக்கு தயாராகும் எல்ஐசி : பங்குகள் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாகக் கணிப்பு

மத்திய அரசின் நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓ பங்குகள் வெளியீடு அடுத்த மாதம் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதன் உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும்  அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

LICs embedded value set at over Rs 5 lakh crore: Govt official
Author
New Delhi, First Published Feb 4, 2022, 12:27 PM IST

மத்திய அரசின் நிறுவனமான எல்ஐசியின் ஐபிஓ பங்குகள் வெளியீடு அடுத்த மாதம் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அதன் உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும்  அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

வரும் மார்ச் மாதம் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை நடந்தால், நாட்டிலேயே மிகப்பெரிய ஐபிஓ விற்பனையாகமாறும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

மத்திய அரசு சார்பில் இன்னும் எல்ஐசி நிறுவனத்தின் உட்பொதிக்கப்பட்ட பங்குகள் விலை குறித்து அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் ரூ.5 லட்சம் கோடிக்கும்அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஓ விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, நாட்டின் நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

LICs embedded value set at over Rs 5 lakh crore: Govt official

எல்ஐசி ஐபிஓ விற்பனை நடக்கும் முன், எல்ஐசி வசம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டபின்புதான் ஐபிஓ விற்பனை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பொருளாதார வல்லுநர்கள், ஊடகங்கள் தரப்பில் எல்ஐசி ஐபிஓ மதிப்பு 5300 கோடி டாலர் முதல் 15,000 கோடி டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பு வெளியாகும்போதுதான் எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு சந்தையில் உயரும், அந்த பங்குகள் மதிப்பின் மூலம்எவ்வளவு பணத்தை மத்தியஅரசால் பெற முடியும் என்பதும் தெரியவரும். அரசின் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கவும், முதலீட்டு விலக்கலில் இலக்கை அடையவும் எல்ஐசி பங்கு விற்பனை முக்கிய மைல்கல்லாக அமையும்.

மத்திய அரசின் பங்கு விலக்கல் துறையின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறுகையில் “ எல்ஐசி பங்குகளி்ன் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம். நிறுவனத்தின் மதிப்பு இந்தத் தொகையைவிட இன்னும் அதிகமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்

LICs embedded value set at over Rs 5 lakh crore: Govt official

ஆனால், பொருளாதார வல்லுநர்கள் கூற்றுப்படி, உட்பொதிக்கப்பட்ட பங்குகள் மதிப்பைவிட 4 மடங்கு முதல் 5 மடங்குவரை எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.

வாழ்நாள் காப்பீடு சந்தையில் பெரும்பாலான பங்குகள் எல்ஐசி நிறுவனத்திடமே இருக்கிறது. மத்திய அரசு தன்னிடம் இருக்கும் பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்து, 1200 கோடி டாலர் அளவுக்கு நிதி திரட்டி, நிதிப்பற்றாக்குறையை சரி செய்ய முயல்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios