Asianet News TamilAsianet News Tamil

lic share price:1700 கோடி டாலர் நஷ்டம்: ஆசியாவிலேயே மோசமான இழப்பில் எல்ஐசி நிறுவனம்: கதறும் முதலீட்டாளர்கள்

lic share price  ஆசியாவிலேயே ஐபிஓ வெளியீட்டில் மோசமான இழப்பந்தைச் சந்தித்த நிறுவனங்களில் ஒன்றாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து 1700 கோடி டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது.

lic share price : With $17 Billion Loss, LIC IPO Is A Colossal Wealth Killer
Author
Mumbai, First Published Jun 14, 2022, 12:12 PM IST

ஆசியாவிலேயே ஐபிஓ வெளியீட்டில் மோசமான இழப்பந்தைச் சந்தித்த நிறுவனங்களில் ஒன்றாக எல்ஐசி நிறுவனம் இருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதிலிருந்து 1700 கோடி டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது.

கடந்த மே மாதம் 17ம் தேதி பங்குச்சந்தையில் பட்டயலிப்பட்டதிலிருந்து எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 29 சதவீதம் சரிந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இருந்த எல்ஐசி தற்போது 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

lic share price : With $17 Billion Loss, LIC IPO Is A Colossal Wealth Killer

தென் கொரியாவின் எல்ஜி நிறுவனம் பட்டியலிடப்படும்போது முதலிடத்தில் இருந்து பின்னர் படிப்படியாகச் சரிந்தது. அதேபோன்ற நிலையை எல்ஐசி நிறுவனம் பெற்றுள்ளது. 

2700 கோடி டாலராக இருந்த எல்ஐசி நிறுவனம் தற்போது ஆசியாவிலேயே இந்த ஆண்டின் மிகப்பெரிய வீழ்ச்சி கண்ட நிறுவனமா மாறிவிட்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிகரித்து வரும் வட்டி, உலகளவில்அதிகரித்து வரும்பணவீக்கம், ரூபாய் மதிப்பு குறைவு போன்றவற்றால், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 9 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

அதிலும் எல்ஐசி நிறுவனப் பங்குகள் தொடர்ந்து 10-வது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது. அதிலும் ஆங்கர் முதலீட்டாளர்களின் கட்டாய லாக்கின் காலம் நேற்று முடிந்தபின் பங்கு மதிப்பு மளமளவெனச் சரிந்தது. 

lic share price : With $17 Billion Loss, LIC IPO Is A Colossal Wealth Killer

கடந்த மாதம் 17ம் தேதி எல்ஐசி பங்கு பட்டியலிடும்போது ஒரு பங்கு மதிப்பு ரூ.949ஆக இருந்தது. அதுமுடல் இப்போது வரை எல்ஐசி பங்கு மதிப்பு 28 சதவீதம் சரிந்துள்ளது. 

எல்ஐசி பங்கு ஒதுக்கீடு செய்யும்போது, சில்லரை முதலீட்டாளர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கு ரூ.905 ஆகவும், பாலிசிதாரர்களுக்கு ரூ.849ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது எல்ஐசி பங்கு விலை ரூ.681ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

lic share price : With $17 Billion Loss, LIC IPO Is A Colossal Wealth Killer

எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடம்போது ரூ.6 லட்சம் கோடியாக இருந்தது. பட்டியலிடப்பட்டதிலிருந்து தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த 10 நாட்களாக எல்ஐசி பங்கு மதிப்பு 19% சரிந்து சந்தை மதிப்பிலிருந்து ரூ.1.20 லட்சம்கோடி இழந்துள்ளது.

பிராவிட்மார்க் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் கோராசங்கர் கூறுகையில் “ முதலீட்டாளர்கள் என்ன செய்வதென்ற தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எல்ஐசி பங்கு சரிவுக்குப்பின் தீவிரமான சந்தை ஆலோசனைகள் முடிவுகள் ஏதும் இல்லை. எவ்வாறு எல்ஐசி நிறுவனம் வளரப்போகிறது, நிலைப்பாடு என்ன என்பதுகுறித்த எந்த தெளிவான விளக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios