lic share price: எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று மேலும் 3 சதவீதம் சரிந்தது. எல்ஐசி நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதன் எதிரொலியால் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு இன்று மேலும் 3 சதவீதம் சரிந்தது. எல்ஐசி நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதன் எதிரொலியால் பங்கு மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

எல்ஐசி பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் ஏற்கெனவே தலையில் கைவைத்துள்ளநிலையில் அடி மீது அடி, அவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் எல்ஐசி பங்கு மதிப்பு ஐபிஓவின் வெளியிடப்பட்ட ஒரு பங்கு ரூ.949 என்ற விலையிலிருந்து 15 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ.810 எனச்சரிந்துள்ளது.

2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் குறைந்து ரூ.2,371.55 ஆக குறைந்துள்ளது. கடந்த 2020-21ம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம், ரூ.2,893 கோடியாகஇருந்தது. ஆனால், கடந்த நிதியாண்டின் கடைசிக்காலாண்டான 2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதத்தில் 18 சதவீதம் குறைந்தது.

எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகள் கடந்த 2ம் தேதி முதல் 9ம் தேதிவரை நடந்தன. ஐபிஓ வெளியிடப்பட்டு, பங்குகளும் கடந்த 17ம் தேதி முதல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுவிட்டன. ஆனால், லிஸ்டிங் விலை ஒரு பங்கு மதிப்பு ரூ.949 ஆக இருந்தநிலையில் 8 சதவீதம் குறைத்தது ரூ.872க்கு பட்டியலிட்டது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

எல்ஐசி பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஏறக்குறைய ரூ.80ஆயிரம் கோடிக்கும் அதிகமாக எல்ஐசி பங்கு மதிப்பு சரிந்துள்ளது ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயிரதத் 675 கோடியாகக் குறைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமைவர்த்தகம் முடிவில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் சரிந்து ரூ.5 லட்சத்து 19ஆயிரத்து 630 கோடியாகக் குறைந்தது. அதாவது, எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.80ஆயிரத்து 600 கோடி குறைந்தது. ஏறக்குறைய முதலீட்டாளர்களுக்கு ரூ.80ஆயிரத்துக்கும் அதிகமான கோடி இழப்பு ஏற்பட்டது. தள்ளுபடி செய்து லிஸ்டிங் செய்யப்பட்டதால் ரூ.38ஆயிரத்து 45 கோடியும் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் எல்ஐசி பங்கு மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று எல்ஐசி பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.821 ஆக இருந்த நிலையில் அடுத்த இரு நாட்களில் 10 ரூபாய் குறைந்து இன்று ஒரு பங்கு மதிப்பு ரூ.810ஆகச் சரிந்துள்ளது.