பாலிசிதாரர்கள் ப்ரீமியம் செலுத்தாமல், புதுப்பிக்காமல் காலாவதியான காப்பீட்டை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் 2-வது முறையாக இதுபோன்ற வாய்ப்பை எல்ஐசி காப்பீடுதார்களுக்கு வழங்குகிறது.

பாலிசிதாரர்கள் ப்ரீமியம் செலுத்தாமல், புதுப்பிக்காமல் காலாவதியான காப்பீட்டை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிதியாண்டில் 2-வது முறையாக இதுபோன்ற வாய்ப்பை எல்ஐசி காப்பீடுதார்களுக்கு வழங்குகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது, ஊதியக்குறைவு ஏற்பட்டது. இதனால் எல்ஐசி நிறுவனத்தில் காப்பீடு எடுத்தவர்கள் ப்ரீமியம் தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் இருந்ததால், காப்பீடு காலாவதியாகி இருக்கும். இதனால் ஏற்கெனவே செலுத்திய தொகையை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். அவர்களுக்காக எல்ஐசி நிறுவனம் புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதன்படி, ப்ரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசி வைத்திருப்பவர்கள், வரும் 7ம் தேதி முதல் தள்ளுபடித் தொகையுடன் செலுத்தி தங்கள் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ள முடியும். இந்த வாய்ப்பு மார்ச்25ம் தேதிவரை வழங்கப்பட்டுள்ளது.

பாலிசிதாரர்கள் எடுத்துள்ள காப்பீட்டுத் தொகையின் அளவைப் பொருத்தும், எவ்வளவு ப்ரீமியம் செலுத்தியுள்ளார்கள் என்பதைப் பொருத்தும் அவர்களுக்கு தள்ளுபடித்தொகை வழங்கப்படும். சுகாதார மற்றும் மைக்ரோ இன்சூரன்ஸுக்கும் காலதாமதமாக ப்ரீமியம் செலுத்துவதில் தள்ளுபடித் தொகை தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ மருத்துவ மற்றும் இதரபாலிசிகளில் ரூ.ஒரு லட்சம் வரை காப்பீடு எடுத்தவர்களுக்கு தாமதப்ரீமியக் கட்டணத்தில் 20 சதவீதம் தல்ளுபடி தரப்படும். 

ரூ.ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ரூ.3 லட்சம்வரை தாமதப்ரீமியக் கட்டணத்தில் 25%வரை தள்ளுபடிதரப்படும். ரூ.3லட்சத்துக்கு அதிகமாக காப்பீடு எடுத்தவர்களுக்கு தாமதப்ரீமியக் கட்டணத்தில் 30% தள்ளுபடி தரப்படும். மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டத்தில் தாமதக் கட்டணத்தில் முழுத்தள்ளுபடி தரப்படும். 

தவிர்க்க முடியாத சூழலில் காப்பீடுதாரர்கள் தங்களின் பாலிசிக்கு ப்ரீமியம் தொகையை செலுத்தாமல் இருப்பார்கள் அதனால் பாலிசி காலாவதியாகியிருக்கும். பெருந்தொற்று காலத்தில் அந்த காப்பீடுதாரர்களை பாதுகாக்கும் நோக்கில் எல்ஐசி நிறுவனம் 2-வது முறையாக இந்த வாய்ப்பை வழங்கி தாமதப்ரீமியம் தொகையைச் செலுத்தி, காப்பீட்டை புதுப்பிக்க வாய்ப்புவழங்கியுள்ளது. மேலும் விவரங்களை அருகில் உள்ள எல்ஐசி அலுவகத்தையோ அல்லது இணையதளத்தையோ அணுகலாம்.