Asianet News TamilAsianet News Tamil

lic ipo price : எல்ஐசி ஐபிஓ: பாலிசிதாரர்கள் எப்படிபங்குகளை வாங்கி முதலீடு செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்

lic ipo price : எல்ஐசி பாலிசி வைத்திருப்போர் எவ்வாறு பங்குகளை வாங்கலாம் என்பதற்கு எல்ஐசி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

lic ipo price : LIC IPO  How can policyholders invest in the mega listing?
Author
Mumbai, First Published Apr 28, 2022, 11:36 AM IST

எல்ஐசி பாலிசி வைத்திருப்போர் எவ்வாறு பங்குகளை வாங்கலாம் என்பதற்கு எல்ஐசி நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

3.5% பங்குகள்

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகலில் 3.5 சதவீதப் பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய இருக்கிறது. இதன் மூலம் ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட இருக்கிறது. ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

lic ipo price : LIC IPO  How can policyholders invest in the mega listing?

எல்ஐசி பாலிசி வைத்திருக்கும் ஒவ்வொரு பாலிசிதாரரும் தலா ரூ.60 தள்ளுபடி பெறுவார்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.45 தள்ளுபடி பெறுவார்கள்.

மே 4ம் தேதி

வரும் மே 2-ம் தேதி எல்ஐசி ஐபிஓ தொடங்குகிறது. முதலில் ஆங்கர் இன்வெஸ்டாருக்கும், மே 4ம் தேதி முதல் 9ம் தேதிவரை மக்களுக்கும் ஐபிஓ வெளியிடப்படுகிறது. ஆங்கர் இன்வெஸ்டர்ஸ் மூலம் ரூ.5600 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் மே 17ம் தேதி முதல் எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது. 

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் காந்தா பாண்டே கூறுகையில்  “ எல்ஐசி நிறுவனத்தை உருவாக்கியவர்களே பாலிசிதாரர்கள்தான். அவர்களை இப்போது பங்குதாரர்களாக அழைக்கிறோம். லட்சக்கணக்கானஇ ந்தியர்கள் எல்ஐசி நிறுவனத்தில் பங்குதாரர்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

lic ipo price : LIC IPO  How can policyholders invest in the mega listing?

பாலிசிதாரர்கள் எவ்வாறு பங்குவாங்குவது

எல்ஐசி பாலிசிதாரர்களுக்காக 2.21 கோடி பங்குகள் அதாவது 10 சதவீதப் பங்குகளை எல்ஐசி ஒதுக்கியுள்ளது. 15.80 லட்சம் பங்குகள்0.7 சதவீதம் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்கள், ஊழியர்கள் அனைவரும் அதிகபட்சமாக ரூ.2 லட்சம்வரை வாங்க முடியும். 

சில்லரை வர்த்தகராகவும், பாலிசிதாரராகவும், ஊழியராகவும் ஒருவர் இருந்தால், அவருக்கு 3 அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்படும். அவரின் பங்குவாங்கும் அளவும் ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும்.

பாலிசிதாரர்கள் பங்குதாரர்களாக மாற விரும்பும்பட்சத்தில் அவர்கள் தங்கள் பாலிசியுடன் பான் எண்ணை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும், டி-மேட் கணக்கும் தொடங்க வேண்டும். பாலிசியுடன், பான் எண்ணை இணைக்கும் காலக்கெடு கடந்த பிப்ரவரி மாதத்தோடு முடிந்துவிட்டது.

lic ipo price : LIC IPO  How can policyholders invest in the mega listing?

பாலிசியுடன் பான் எண்ணை இணைத்தவர்கள் ஐபிஓவில் நேரடியாகப் பங்கேற்க முடியாது. அவர்களுக்கு டீமேட் கணக்கு முக்கியம். ஆதலால் பாலிசி தாரர்கள் பங்கு வாங்க விரும்பும்போது, அவர்கள் பாலிசியோடு பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும், டீமேட் கணக்கும் இருக்க வேண்டும்
 

Follow Us:
Download App:
  • android
  • ios