lic ipo gmp | lic ipo price| rate hikelic ipo :எல்ஐசி பங்கு விற்பனையில் பொது முதலீட்டாளர்களுக்கான முதல் நாளில், 67 சதவீத முதலீடு வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள், சில்லரை முதலீட்டாலர்கள் தரப்பில் அமோகமான ஆதரவு இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

எல்ஐசி பங்கு விற்பனையில் பொது முதலீட்டாளர்களுக்கான முதல் நாளில், 67 சதவீத முதலீடு வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள், சில்லரை முதலீட்டாலர்கள் தரப்பில் அமோகமான ஆதரவு இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை வரும் 9ம் தேதி வரை இருப்பதால் அடுத்துவரும் நாட்களிலும் முதலீடு பலமாக ஈர்க்கப்படும், சனிக்கிழமை கூட பங்கு விற்பனை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 16.27 கோடி பங்குகளுக்கு 10.86 பங்குகளுக்கு விண்ணப்பம் வந்துள்ளது. பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்படுகிறது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை விற்கப்படுகிறது.

கடந்த 2ம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு நடந்த பங்கு விற்பனையில் ரூ.5,267 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதில் 71 சதவீத முதலீடு உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் மூலம் வந்துள்ளன. 123 முதலீட்டாளர்கள் 5.93 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். ஒரு பங்கு ரூ.949க்கு விற்கப்பட்டுள்ளது. இதில் 4.21 கோடி பங்குகள் மட்டும் 15 உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு 99 திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் எஸ்பிஐ வங்கியின் பரஸ்ர நிதி திட்டம் ரூ.1000 கோடிக்கு 4 வேறுபட்ட திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் பரஸ்பர நிதி ரூ.700 கோடிக்கு 6 விதமான திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. ஹெச்டிஎப்சி பரஸ்பரநிதி திட்டம் ரு.650 கோடி 10 வகையான திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. ஆதித்யா பிர்லா சன்லைப் பரஸ்பரநிதி திட்டம், ஆக்சிஸ் வங்கியின் பரஸ்பர நிதித்திட்டமும் அதிக அளவில் முதலீடுசெய்துள்ளன

சிங்கப்பூர் அரசின் சார்பில் ஜிஐசி நிறுவனம் ரூ.400 கோடி்ககும், பிஎன்பி முதலீடு நிறுவனம் சார்பில் ரூ.450 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளன. இதில் ரூ1600 கோடி வெளிநாடுகளில் இருந்து முதலீடாக வந்துள்ளது. 

ஆனால், மத்தியஅரசு 3.5 சதவீதப் பங்குகளை விற்பனை செய்து ரூ.21 ஆயிரம் கோடி நிதி திரட்ட இருக்கிறது. இன்னும் 4 நாட்கள் முழுமையாக இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் எனத் தெரிகிறது