LIC IPO GMP :எல்ஐசி பங்கு விற்பனை  இன்று நடைபெற இருக்கும் நிலையில், பாலிசிதாரர்கள் எவ்வாறு பங்குகளை வாங்குவது, ஒரு பங்கின் விலை என்ன, எத்தனை நாட்கள் ஐபிஓ நடக்கும் என்பதுகுறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்

எல்ஐசி பங்கு விற்பனை இன்று(புதன்கிழமை) நடைபெற இருக்கும் நிலையில், பாலிசிதாரர்கள் எவ்வாறு பங்குகளை வாங்குவது, ஒரு பங்கின் விலை என்ன, எத்தனை நாட்கள் ஐபிஓ நடக்கும் என்பதுகுறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்

எல்ஐசி ஐபிஓ என்றால் என்ன?

எல்ஐசி ஐபிஓ என்பது எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பதாகும். குடியரசுத் தலைவரிடம் இருக்கும் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதப் பங்குகளை மத்திய நிதிஅமைச்சகத்தின் மூலம் பொதுமுதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த பங்கு விற்பனை மூலம் ரூ.21 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

எல்ஐசி ஐபிஓ எப்போது தொடங்குகிறது?

எல்ஐசி ஐபிஓ 2ம்தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு தொடங்கிவிட்டது. ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.5600 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், ஆங்கர் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல டிமான்ட் எல்ஐசி பங்கிற்கு இருப்பதால் ரூ.7ஆயிரம் கோடிவரை கிடைக்கும் எனத் தெரிகிறது. நாளை(4ம்தேதி) பொது முதலீட்டாளர்கள் அதாவது பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு பங்கு விற்பனை தொடங்குகிறது. இது வரும் 9ம்தேதி வரை நடக்கும்.

பாலிசிதாரர்களுக்கும், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு தள்ளுபடி இருக்கிறதா?
ஆம், தள்ளுபடி இருக்கிறது. பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாயும், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு 45 ரூபாயும் தள்ளுபடி தரப்படுகிறது. 

ஒரு பங்கின் விலை எவ்வளவு?

எல்ஐசி பாலிசி வைத்திருக்கும் ஒவ்வொரு பாலிசிதாரரும் தலா ரூ.60 தள்ளுபடி பெறுவார்கள், ஊழியர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் குறைந்தபட்சமாக ரூ.45 தள்ளுபடி பெறுவார்கள். இந்த தள்ளுபடி போக பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கின் விலை ரூ.889க்கு விற்கப்படும். சில்லரை முதலீட்டாளர்களுக்கு ரூ.45 தள்ளுபடி போக, ரூ904க்கு விற்கப்படும் ஒரு செட் பங்கில் 15 பங்குகள் இருக்கும் இதேபோன்று 15 மடங்காக வாங்க வேண்டும்.

பாலிசிதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் எவ்வளவு சதவீதம் பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு பங்கு விற்பனையில் 10 சதவீதமும், ஊழியர்களுக்கு 5 சதவீதமும் ஒதுக்கப்படும். பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும், 15.80 லட்சம் பங்குகள் ஊழியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருவர் குறைந்தபட்சம் 15 பங்குகள் வாங்க வேண்டும். 15 பங்குகள் அளவில் எத்தனை மடங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்.

ஆங்கர் முதலீட்டாளர்கள், சில்லரை முதலீட்டாளர்களுக்கு எத்தனை சதவீதம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன?

ஆங்கர் முதலீ்ட்டாளர்களுக்கு 5.92கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் மத்திய அரசு ரூ.5,630 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 50 சதவீதப் பங்குகள் அனைத்தும் தகுதியான முதலீட்டாளர்களுக்கும் 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் 15 சதவீதம் நிறுவனமில்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐபிஓவுக்கு ஒரு பாலிசிதாரர் எவ்வாறு விண்ணப்பம் செய்வது?

சில்லரை முதலீ்ட்டாளர்கள், பாலிசிதார்ரகள் பங்குகள் வாங்க டிமேட் கணக்கு வைத்திருப்பது அவசியம், அது இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது. குரோ(Groww), அப்ஸ்டாக்ஸ்(Upstox) and ஜெரோதா(Zerodha) என பல செயலிகள் மூலம்விண்ணப்பிக்கலாம்.
1. முதலில் டீமேட் கணக்கு மூலம் பங்கு விற்பனைத் தளத்துக்குள் செல்ல வேண்டும்.
2. அதில் ஐபிஓ பிரிவில் கிளிக் செய்து,அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள், வங்கிக்கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். 
3. எத்தனை பங்குகள் வேண்டும், வாங்க விரும்பும் விலை ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். 
4. விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை படித்துப் பார்த்தபின் அதற்கு சப்மிட் கொடுக்க வேண்டும்.
5. அதன்பின் பணம் செலுத்த விரும்பும் தளம் யுபிஐ, வங்கிக்கணக்கு, ஆன்-லைன் பேங்கிங் குறித்த தளம் உருவாகும் அதில் பணம் செலுத்த வேண்டும்.

எப்போது பங்குகள் கைக்கு கிடைக்கும் ?
எல்ஐசி பங்குகளை வாங்கிவிட்டால் அதற்குரிய செய்தி உங்கள் செல்போன் எண் அல்லது மின்னஞ்சலுக்கு வரும். ஆனால், எப்போதுவரும் என்ற தேதி குறிப்பிடவில்லை. ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவு முதலீட்டாளர்கள் இருந்தால், பங்குகள் வழங்குவதை செபி முடிவு எடுக்கும்.

எத்தனை பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

இதுவரை அதுகுறித்த எந்தத் தகவலும் இல்லை. பொதுவாக பங்கு ஒதுக்கீடு பிஎஸ்இ பதிவேட்டில், இணையதளத்தில் தெரிவிக்கப்படும்.

எப்போது எல்ஐசி பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்படும்?.

எல்ஐசிஐபிஓ வரும் 17ம் தேதி பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.