lic ipo gmp :எல்ஐசி ஐபிஓவில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 71 சதவீதப் பங்குகளை உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள்(எம்எப்) வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் ரூ.5627 கோடி வந்துள்ளது

எல்ஐசி ஐபிஓவில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் 71 சதவீதப் பங்குகளை உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள்(எம்எப்) வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் ரூ.5627 கோடி வந்துள்ளது

ஆங்கர் முதலீட்டாளர்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி பங்கு விற்பனை பொது முதலீட்டாளர்களுக்கு இன்று தொடங்குகிறது. ஆனால், ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு கடந்த 2ம் தேதி தொடங்கியது. ஏறக்குறைய 5.93 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டன, இதில் 123 முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். ஒரு பங்கு விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்ககப்பட்டு பங்குகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. அதில் “ 5 கோடியே 92 லட்சத்து 96 ஆயிரத்து 853 பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இதில் 4 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 610 பங்குகள் அதாவது 71 சதவீதப் பங்குகளைஉள்நாட்டில் உள்ள 15 பரஸ்பர நிதி நிறுவனங்களை 99 திட்டங்களின் கீழ் வாங்கின” எனத் தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ நிறுவனத்தின் பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.ஆயிரம் கோடிக்கு பல்வேறு திட்டங்களில் பங்குகளை வாங்கியுள்ளது. ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் பரஸ்பர நிதி ரூ.700 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது. ஹெச்டிஎப்சி பரஸ்பரநிதி ரூ.650 கோடிக்கு 10 விதமான திட்டங்களில் வாங்கியுள்ளன. இது தவிர ஆதித்யா பிர்லாவின் சன்லைப் பரஸ்பர நிதி, ஆக்சிஸ் வ்கியின் பரஸ்பர நிதி ஆகியவையும் பங்குகளை வாங்கியுள்ளன

சிங்கப்பூர் அரசு

வெளிநாடுகளைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் அரசின் ஜிஐசி நிறுவனம் ரூ.400 கோடிக்கு, பிஎன்பி முதலீட்டு நிறுவனம் ரூ.450 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளன. ஏறக்குறைய ரூ.1600 கோடி வெளிநாடு முதலீட்டாளர்கள், நிறுவனங்கள் மூலம் கிடைத்துள்ளன.

இன்று தொடங்கும் பொது முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிசிதார்ரகள் ஊழியர்களுக்காக தனியாக பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சில்லரை முதலீட்டாளர்களுக்காக ரூ.8500 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.