Asianet News TamilAsianet News Tamil

LICIPO:எல்ஐசி பாலிசி உங்களிடம் இருக்கா? நீங்களும் பங்குகளை வாங்கலாம்: செபியிடம் பங்குகள் ஒப்படைப்பு

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை 100 சதவீதம் ஐபிஓ மூலம் விற்பனை செய்ய தயாராகிவிட்டது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் நேற்று தாக்கல் செய்துவிட்டது.

LIC IPO: DHRP filed with SEBI, govt to offload 5% stake
Author
Mumbai, First Published Feb 14, 2022, 12:13 PM IST

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை 100 சதவீதம் ஐபிஓ மூலம் விற்பனை செய்ய தயாராகிவிட்டது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் நேற்று தாக்கல் செய்துள்ளது.

எல்ஐசி பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிட்டதால், அடுத்த 3 வாரங்களுக்குள் ஐபிஓ நடந்துவிடும் என்று செபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வரும் மார்ச் மாதம் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை நடந்தால், நாட்டிலேயே மிகப்பெரிய ஐபிஓ விற்பனையாக மாறும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

LIC IPO: DHRP filed with SEBI, govt to offload 5% stake

ஐபிஓ விற்பனை மூலம் கிடைக்கும் நிதியை வைத்து, நாட்டின் நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எல்ஐசி ஐபிஓ விற்பனை நடக்கும் முன், எல்ஐசி வசம் இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டபின்புதான் ஐபிஓ விற்பனை இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசின் நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கவும், முதலீட்டு விலக்கலில் இலக்கை அடையவும் எல்ஐசி பங்கு விற்பனை முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த பங்குவிற்பனை மூலம் மத்திய அரசு ரூ.60ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம்கோடிவரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

பங்குகள் விற்படுவதில் 10 சதவீதத்தை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கவும், அவர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடியில் பங்குகளை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LIC IPO: DHRP filed with SEBI, govt to offload 5% stake

இதற்காக மத்திய அரசு டிஆர்ஹெச்பி எனச்சொல்லப்படும் பங்கு விற்பனைக்கான வரைவு அறிக்கையை எல்ஐசி மூலம் செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. எல்ஐசி நிறுவனம் 31.62 கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது.

எல்ஐசி நிறுவனம் வெளியிடம் பங்குவிற்பனையில் பாலிசிதாரர்களும் பங்குகளை தாராளமாக வாங்கலாம். அவர்களுக்காக 5 சதவீதம் ஒதுக்கப்படலாம்.இதுதவிர எல்ஐசி ஊழியர்கள், பணியாளர்களுக்கு தனியாக 10 சதவீதம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது

ஆனால், எல்ஐசி பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்குவதற்கு முன், பாலிசியில் தனது பான்-எண்ணை இணைத்திருப்பது கட்டாயம். இல்லாவிட்டால் பங்குகளை வாங்க முடியாது

LIC IPO: DHRP filed with SEBI, govt to offload 5% stake

மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மையின் செயலாளர்  துஹின் கந்தா ட்விட்டரில் பதவிட்ட கருத்தில் “ மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி பங்குகளை ஐபிஓ வெளியிடுகிறது. ஆனால், எல்ஐசி சார்பில் எந்த பங்கும் விற்பனை செய்யவில்லை. ஏறக்குறைய 31.60 கோடி பங்குகள், அதாவது 5 சதவீதம் இருக்கும். எல்ஐசி வசம் 66 சதவீதம் பங்குகள் உள்ளன. அதாவது 28.30 கோடி பாலிசிகள், 13.50 லட்சம் ஏஜெண்டுகள் 2021, மார்ச் 31வரை உள்ளனர். 2021, செப்டம்பர் 30ம் தேதிவரை எல்ஐசியின் மதிப்பு ரூ5.39 லட்சம் கோடி” எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios