உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறதா? இன்னும் இரண்டே நாட்கள்; பின்னர் என்ன நடக்கும்?
உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறதா? இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கிறது. மாற்றிக் கொள்ளாவிட்டால், இன்னும் காலக்கெடு கொடுக்கப்படுமா என்றால் அதற்கான பதிலை இதுவரை ஆர்பிஐ அளிக்கவில்லை.
புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவது என்றும் இனி புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படாது என்றும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா அறிவித்து இருந்தது. 2000 ரூபாய் நோட்டை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி என்று நிர்ணயித்து இருந்தது. இன்று வங்கிக்கு விடுமுறை என்பதால், ரூபாய் நோட்டை மாற்ற முடியாது. நாளை ஒருநாள் மட்டுமே இருக்கிறது.
கர்நாடகாவில் பந்த் என்பதால் அங்கு வங்கிகள் செயல்படுமா என்பது சந்தேகமே. இந்த நிலையில் மீண்டும் காலக்கெடு வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஏறக்குறைய அனைத்து 2000 ரூபாய் நோட்டுக்களும் வங்கிக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.
ஆர்பிஐ கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி கூறியிருந்த செய்தியில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ரூ. 3.32 லட்சம் கோடி அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டு இருப்பதாகவும், அதே ஆகஸ்ட் 30 ஆம் தேதியில் 0.24 லட்சம் கோடி அளவிற்கு 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி பார்க்கும்போது மே 16ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 93 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் வங்கிக்கு திரும்பிவிட்டது அல்லது டெபாசிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. செப்டம்பர் மாதம்தான் வங்கிக்கு அதிகளவில் பணம் திரும்பியுள்ளது. இதையடுத்தே புழக்கத்திலும் இந்தப் பணம் குறைந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு மேல் காலக்கெடுவை ஆர்பிஐ நீடிக்குமா என்பது தெரிய வரும்.
ஆர்பிஐ மீண்டும் அறிவிப்பை வெளியிடும் வரை 2000 ரூபாய் நோட்டு அதன் மதிப்பை இழந்துவிடும் என்று கூறிவிட முடியாது. வங்கிகளில் தனிப்பட்ட நபர் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய எந்த அளவுகோலையும் நிர்ணயிக்கவில்லை. ஆனால், கேஒசி நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்து இருந்தது.
கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது! பிஸ்கட் போல சோப்பை சாப்பிட்ட சீன முதலாளி...காரணம் என்ன தெரியுமா?
ஆனால், சேமிப்புக் கணக்கு மற்றும் ஜன் தன் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்வதற்கு வரைமுறை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரைமுறைக்குள் தான் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். இதுதவிர ஒரே நாளில் வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், பான் கார்டு சமர்பிக்க வேண்டும். தபால் அலுவகத்திலும் பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆனால், பான் கார்டு அவசியம்.
செப்டம்பர் 30 வரை, ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் அல்லது அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் ரூ. 2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள், request slip அல்லது அடையாளச் சான்று தேவையில்லாமல் இந்தப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இருப்பினும், சில பொதுத்துறை வங்கிகள் வெவ்வேறு நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம், எனவே ரூ. 2,000 நோட்டுகளை மாற்றும்போது, ஏதாவது ஒரு அடையாளச் சான்று வைத்திருப்பது அவசியம்.