கியா கேரன்ஸ் மாடல் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கியா கேரன்ஸ் மாடல் இந்தியாவில் அதிகாரப்பூர்வ்மாக அறிமுகம் தசெய்யப்பட்டது. புதிய கியா கேரன்ஸ் மாடல் விலை அறிமுக சலுகையாக ரூ. 8.99 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் நான்காவது மாடல் இது ஆகும்.
புதிய கேரன்ஸ் மாடல் ஆனந்தபூரில் உள்ள கியா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராஸ் மாடல் இந்திய விற்பனையை தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. புதிய கேரன்ஸ் மாடலில் ஸ்ப்லிட் ஸ்டைல் லைட்டிங் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிரமாண்ட பம்ப்பர் மற்றும் பெரிய ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கும் கேரன்ஸ் மாடலில் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், எல்.இ.டி. ஸ்ட்ரிப், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட டெயில்கேட் வழங்கப்பட்டு உள்ளது. புதிய கேரன்ஸ் மாடல் அளவில் 4540mm நீளமும், 1800mm அகலமும், 1700mm உயரமும், 2780mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. அதன்படி அளவில் இந்த கார் மாருதி சுசுகி எர்டிகா, XL6 மற்றும் ஹூண்டாய் அல்கசார் மாடல்களை விட நீளமானது ஆகும்.

புதிய கேரன்ஸ் உள்புறத்தில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட டச் ஸ்கிரீன், 12.5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், 8 ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட்கள், ஆம்பியண்ட் மூட் லைட்டிங், ஸ்பாட்லைட்கள், ரியர் டேபில் டையர்கள், சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் கியா கேரன்ஸ் மாடல் பிரீமியம், பிரெஸ்டிஜ், பிரெஸ்டிஜ் பிளஸ், லக்சரி மற்றும் லக்சரி பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 7 ஸ்பீடு டி.ச.டி. மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
