மதுரையில் ஜோய் ஆலுக்காஸ் புதிய கிளை திறப்பு..! வித விதமான ஆபரணங்களை அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி..!

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை இன்று மதுரையில் திறந்து வைத்து, பல புது வகையான ஆபரணங்களை மக்களுக்கு  அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.
 

joy alukkas opened their new branch in madurai today

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை இன்று மதுரையில் திறந்து வைத்து, பல புது வகையான ஆபரணங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.

joy alukkas opened their new branch in madurai today

தமிழகத்தில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய 3 ஷோ ரூம்கள் திறந்து தங்களது நிறுவனத்தை விரிவுப்படுத்தி வருகிறது ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம். அதன் படி நேற்று, சென்னை தி நகரில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை விளம்பர தூதரும் நடிகையுமான கஜோல் தேவ்கன் திறந்து வைத்து புதிய புதிய மாடல் நகைகளை அறிமுகம் செய்தார். உடன் நடிகர் பிரஷாந்த் மற்றும் அவருடைய தந்தையும், நடிகருமான தியாகராஜனும் கலந்துக்கொண்டார். 

அதனை தொடர்ந்து இன்று, மதுரையில் தங்களது புதிய கிளையை தொடங்கி வைத்து, புது புது ஆபரணங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜோய் ஆலுக்காஸ். மேலும், ஜோய் அலுக்காஸின் புதிய கிளையை திறந்து வைக்க வருகை புரிந்த நடிகர் விஜய் சேதுபதியை பார்க்கவும், புதிய ஆபரணங்களை காணவும் மக்கள் திரளாக திரண்டனர்.

joy alukkas opened their new branch in madurai today

விஜய் சேதுபதியும் மக்களுடன் ஆங்காங்கு செல்பி எடுத்துக்கொண்டு, அனைவரும் வணக்கம் சொல்லி அங்கிருந்து கிளம்பினார். மதுரையில் திறக்கப்பட்ட தங்களது புது கிளையை பற்றி நிறுவனர் ஜோய்.ஆலுக்காஸ் தெரிவிக்கும் போது, 

"தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு எனது நன்றி. எங்களின் வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவே, மேலும் பல ஷோரூம்களை நாங்கள் விரிவுபடுத்திட காரணமாக உள்ளது. மதுரை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் எங்களுக்கு பெருமை" என  தெரிவித்தார்.

joy alukkas opened their new branch in madurai today

நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, "ஜோய் ஆலுக்காஸ் மதுரை  கிளையில் ஆயிரத்திற்கும் மேலான பல புது புது  டிசைன் ஆபரணங்கள் உள்ளது. மதுரை மக்கள் அவர்களது விருப்பம போல நகைகளை வாங்கிக் அணிந்துகொள்ளாம். உங்கள் அனைவரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார். மதுரை புதிய கிளையின் திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு பர்சேஸ்சுக்கும் வீட்டு உபயோக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கி வருகிறது ஜோய் ஆலுக்காஸ்.

"

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் மதுரை புதிய கிளையில் நகைகள் வாங்க மக்கள் அதிக ஆர்வமுடன் மக்கள் கூடினர். உலகின் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. நேற்று சென்னை, இன்று மதுரை, நாளை நாளை கோயம்பத்தூரில் அடுத்த கிளையை தொடங்கி வைக்க உள்ளது ஜோய் ஆலுக்காஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios