ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை இன்று கோயம்பத்தூரில் திறந்து வைத்து, பல புது வகையான ஆபரணங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி.

தமிழகத்தில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய 3 ஷோ ரூம்கள் திறந்து வைத்து உள்ளது ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம். அதன் படி நேற்று முன் தினம், சென்னை தி நகரில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய கிளையை விளம்பர தூதரும் நடிகையுமான கஜோல் தேவ்கன் திறந்து வைத்து புதிய புதிய மாடல் நகைகளை அறிமுகம் செய்தார்.உடன் நடிகர் பிரஷாந்த் மற்றும் அவருடைய தந்தையும், நடிகருமான தியாகராஜனும் கலந்துக்கொண்டார். 

அதனை தொடர்ந்து நேற்று, மதுரையில் தங்களது புதிய கிளையை தொடங்கி வைத்து, புது புது ஆபரணங்களை அறிமுகப்படுத்தி உள்ளது ஜோய் ஆலுக்காஸ். மேலும், ஜோய் அலுக்காஸின் புதிய கிளையை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று, கோயம்புதூரிலும் ஜோய் ஆலுக்காஸின் புதிய கிளை திறந்து வைத்தார் நடிகர் விஜய் சேதுபதி. 

இது குறித்து  நிறுவனர் ஜோய்.ஆலுக்காஸ் தெரிவிக்கும் போது,

"தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவு தான் மென்மேலும் பல கிளைகளை உருவாக்க காரணமாக உள்ளது. கோயம்பத்தூர் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில் எங்களுக்கு பெருமை" என தெரிவித்தார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, "ஜோய் ஆலுக்காஸ் மதுரை கிளையில் ஆயிரத்திற்கும் மேலான பல புது புது  டிசைன் ஆபரணங்கள் உள்ளது. உங்களுக்கு பிடித்த ஆபரணத்தை வாங்கி செல்லுங்கள். உங்கள் அனைவரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்தார். 

"

உலகின் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள ஜோய் ஆலுக்காஸ் கோயம்பத்தூர் கிளையில் இன்றே மக்கள் தொகை அதிகமாக கூடினர். வாங்கும் தங்க நகைகளின் தொகைக்கு ஏற்ப பல்வேறு சிறப்பு பரிசையும் வழங்கி வருகிறது ஜோய் ஆலுக்காஸ் என்பது குறிப்பிடத்தக்கது.