Asianet News TamilAsianet News Tamil

மருந்து நிறுவனங்களுக்கு செக்! டாக்டர்களுக்கான பரிசுப் பொருட்களை வர்த்தகச் செலவில் கணக்குகாட்ட முடியாது

மருந்துகள் விற்பனையை ஊக்குவிக்க, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் கொடுத்துவிட்டு  அதை வர்த்தகச் செலவில் மருந்து நிறுவனங்கள் இனிமேல் சேர்க்க முடியாது. 

Jolt to pharma firms as Finance Bill 2022 declares freebies to docs illegal and cancels tax rebate on business expenditure
Author
New Delhi, First Published Feb 5, 2022, 12:36 PM IST

மருந்துகள் விற்பனையை ஊக்குவிக்க, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும் கொடுத்துவிட்டு  அதை வர்த்தகச் செலவில் மருந்து நிறுவனங்கள் இனிமேல் சேர்க்க முடியாது. 

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இலவசப் பொருட்கள், டூர் செல்வதற்கான  டிக்கெட், பரிசுப்பொருட்கள், பணம் ஆகியவற்றை வரிக்கழிவுக்குள் இனிமேல் கொண்டுவர முடியாதவகையில் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் நடைமுறைக்குவருகிறது

Jolt to pharma firms as Finance Bill 2022 declares freebies to docs illegal and cancels tax rebate on business expenditure

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022-23ம்நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மருத்துவர்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை வர்த்தகச்செலவில் கணக்குக் காட்டி வரிக்கழிவு பெற முடியாது என்று நிதிமசோதாவில் தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் கடந்த 2009ம்ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒழுக்க விதிகளில், மருந்து நிறுவனங்களிடம் இருந்து மருத்துவர்கள் எந்தவிதமான பரிசுப்பொருட்கள், இலவசங்கள், பணம், டூர் பேக்கேஜ் ஆகியவற்றை பெறக்கூடாது. இவ்வாறு பெறும்போது, மருந்து நிறுவனங்கள் அளிக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பும்இன்றி பரிந்துரைக்க நேரிடும், இது தவறான நடைமுறை என்று தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை இனிமேல் தீவிரமா அமலாகும்.

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப்பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், அதை வரிவிதிப்புக்குரிய வர்த்தக வருமானமாக கணக்கில் காட்ட வேண்டும், அதேபோல மருத்துவர்களுக்கு செலவிட்ட தொகையையும் மருந்து நிறுவனங்கள் தங்களின் ஆண்டு வரவு செலவு கணக்கில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

Jolt to pharma firms as Finance Bill 2022 declares freebies to docs illegal and cancels tax rebate on business expenditure

ஆனால், மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பரிசுப்பொருட்கள், இலவசங்கள், டூர்பேக்கேஜ் ஆகியவற்றை வழங்கிவிட்டு, அதை வர்த்தகச் செலவில் எழுதி வரிக்கழிவு பெற்று வந்தனர். 

ஆனால், மத்திய பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022,நிதிமசோதாவைத் தாக்கல் செய்தபோது, இதற்கு செக் வைத்து, விளக்கம் அளித்துவி்ட்டார். அதில் “ மருத்துவர்களுக்கு பரிசுப்பொருட்கள், இலவசங்கள், டூர்பேக்கேஜ் போன்றவற்றை மருந்து நிறுவனங்கள் வழங்குவது 2002, இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைக்கு முரணானது.  

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் பிரிவு 37க்கின் கீழ் ஏற்க முடியாது, அவ்வாறு செலவிடுவது தடை செய்யப்பட்டது. மருத்துவர்களுக்கு செலவிட்டு அதை வர்த்தகச்செலவில் மருந்து நிறுவனங்கள் கணக்கு காட்டி வரிக்கழிவு பெற முடியாது என்பதை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios