jio going to starts jio cab
தூள் கிளப்பும் ஜியோ...!
ஜியோ என்பதுமே, உடனே அடுத்தது எந்த சலுகை வழங்கி இருப்பாங்க என சிந்திக்க தோன்றும். அதுவும் குறிப்பாக , டேட்டா சலுகையில் எண்ணிலடங்கா சலுகையை வாரி வழங்கியது.
இந்நிலையில், இதுவரை தொலை தொடர்பு துறையில் கலக்கிக்கொண்டிருந்த ஜியோ தற்போது, ஜியோ கேப்ஸ்.அதுவும் மிக குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது
ரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபர் மற்றும் நியூ இயர் ஆஃபர்கள்
ஜியோவின் அதிரடி சலுகையால் , ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் உள்ளிட்ட பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது ஜியோ வாடகை கார் நிறுவனத்தை தொடங்க உள்ளது.
அதாவது, ஜியோ சேவையை பயன்படுத்துபவர்களுக்கு, ஜியோ வாடகை கார் சேவையை வழங்கஉள்ளது.
அதன்படி, முதல் கட்டமாக 600 கார்களுடன் இச்சேவை தொடங்கப்படும் என்றும், ஜியோ கேப்ஸ் என்ற இச்சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்க உள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால், வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபெர் ஆகியவை வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.
