Jio Fiber Broadband Coming This Diwali Will Offer 100GB for Just Rs 500 JioTV Live Now Offer More Than 450 Channels

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை தொடர்ந்து பல்வேறு சேவைகளை வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் ஜியோ பிராண்பேண்ட் சேவையில் கால் பதிப்பதற்காக தயாராகி வருகிறது. 

ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவைகளை தொடர்ந்து அந்நிறுவனம் ஃபைபர் டூ ஹோம் (Fiber to Home) திட்டத்தை வழங்க தயாராகி விட்டது. ஜியோ ஃபைபர் என அழைக்கப்படும் புதிய திட்டம் ஜியோ ஃபைபர் பிரீவியூ என அழைக்கப்படும் என்றும் வரும் வாரங்களில் இவை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஜியோ 4ஜி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் ஜியோ ஃபைபர்நெட் சேவையை பயன்படுத்த முன்பணமாக ரூ.4,500 வரை செலுத்த வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜியோ ஃபைபர்நெட் சேவையின் கீழ் 100Mbps என்ற வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் பிரீவியூ சேவையின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவச சேவை வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் அதிகபட்சம் 100 ஜிபி டேட்டாவுக்கு பின் வேகம் குறைக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

ரூ. 500 க்கு 100 ஜிபி டேட்டா 

ஜியோ ஃபைபர் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையைத் தொடங்கவுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்

''ரூ 500 க்கு 100 ஜிபி டேட்டா வழங்கத் திட்டம்''

தற்போது பிராட்பேண்ட் சேவை தரும் மற்ற நிறுவனங்களின் விலையைக்காட்டிலும் 2 மடங்கு குறைவு. 

இந்தியாவில் மொத்தம் 2 கோடி பேரிடம் பிராட்பேண்ட் வசதி உள்ளது.

1 கோடிக்கும் மேலானோர் பிஸ்என்எல் -ன் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஜியோ மொபைல் சேவையை தொடங்கிய பிறகு மற்ற டெலிகாம் நிறுவனங்கள் சேவைக்கான விலையைக் குறைத்தது.

ஜியோ ஃபைபர் தொடங்கியதும் மற்ற நிறுவனங்களில் பிராட்பேண்ட் சேவைக்கான விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.