Asianet News TamilAsianet News Tamil

jet airways: லைசன்ஸ் கிடைத்தது ! விரைவில் பறக்கிறது ஜெட் ஏர்வேஸ்

jet airways : ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏர் ஆப்ரேட்டர் சான்றிதழை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வழங்கியுள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது வர்த்தக சேவையைத் தொடங்கும் எனத் தெரிகிறது

jet airways :  DGCA grants AOC to Jet Airways, airline to resume commercial flight operations soon
Author
Mumbai, First Published May 21, 2022, 10:33 AM IST

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஏர் ஆப்ரேட்டர் சான்றிதழை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வழங்கியுள்ளது. இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது வர்த்தக சேவையைத் தொடங்கும் எனத் தெரிகிறது

மத்திய அரசு கொண்டு வந்த திவால் சட்டத்தின் கீழ் இயங்கும் முதல் இந்திய நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

jet airways :  DGCA grants AOC to Jet Airways, airline to resume commercial flight operations soon

கடந்த 1993ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட பழைமையான தனியார் விமானப் போக்குவரத்து ஜெட் ஏர்வேஸ். பல்வேறு நிதிநெருக்கடி காரணமாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு செயல்பாட்டை நிறுத்தியது. அதன்பின், ஜலான் கல்ராக் கூட்டமைப்பு தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தில் மறுகட்டமைப்பு திட்டத்தை தாக்கல்செய்து மீண்டும் ஜெட்ஏர்வேஸை இயக்க ஒப்புதல் பெற்றுள்ளனர்

3 ஆண்டுகள் இடைவெளியில் கடந்த 5ம் தேதி ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் சோதனை ஓட்டம் ஹைதராபாத் முதல் டெல்லிவரை நடந்தது. அன்றுதான் ஜெட் ஏர்வேஸ் தொடங்கப்பட்டு 29-வது ஆண்டு கொண்டாட்டமாகும்.  3 ஆண்டுகளுக்குப்பின் விரைவில் விமான சேவையில் இயங்க இருக்கிறது. ஓப்ராய் ஹோட்டலின் தலைவராக இருந்த சஞ்சீவ் கபூர் ஜெய் ஏர்வேஸ் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார்.

jet airways :  DGCA grants AOC to Jet Airways, airline to resume commercial flight operations soon

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை முறைப்படி தொடங்கலாம், வர்த்தகரீதியான விமானங்களை இயக்கலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று அனுமதியளித்தது. இதையடுத்து, ஜெட் வேர்ஸ் நிறுவனம் விரைவில் தனது வர்த்தக சேவையை தொடங்க இருக்கிறது.

இது குறித்து ஜெட் ஏர்வேஸ் விமானநிறுவனத்தின் சார்பில் கூறுகையில் “ அடுத்த காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பர் மாதத்துக்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானச் சேவையை நாங்கள் தொடங்கிவிடுவோம். அதற்கு படிப்படியாக வாடிக்கையாளர் சேவை, எங்கள் எதிர்காலத் திட்டம், பயண விவரங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios