jacqueline : ED: sukesh: பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7.12 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகை உள்ளி்ட்ட ரூ.7.27 கோடி சொத்துக்களை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7.12 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகை உள்ளி்ட்ட ரூ.7.27 கோடி சொத்துக்களை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மருந்து நிறுவனர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடிக்கும் அதிகமாக பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நெருக்கமாக இருந்து ஏராளமான பொருட்களை பெற்றதாக விசாரணையில் ஜாக்குலின் பெர்னான்டஸ் தெரிவித்ததையடுத்து, அவரின் ரூ.7 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முடக்கினர்.

மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவி மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது.
அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஜாக்குலினுக்கு ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் கொடுத்ததும், ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 1.70 லட்சம் அமெரிக்க டாலர்களும், 27ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கியதும் தெரியவந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு அழைத்தனர். ஏறக்குறைய 7 மணிநேரம் ஜாக்குலினிடம் அமாலக்கப்பிரிவுவிசாரணை நடத்தியதில் சுகேஷிம் தான் பெற்ற பரிசுப் பொருட்கள், பணம், நகைகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் ரூ.9 லட்சத்துக்கு பெர்சியநாட்டு பூனை, அரேபியக் குதிரை, வைரநகைகள் 15 ஜோடி என ரூ.7 கோடிக்கு பரிசுப் பொருட்களை பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னான்டஸ் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.7.12 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை, ரொக்கம் உள்ளிட்ட ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
