Indian Railways: கன்பார்ம் ஆன ரயில் டிக்கெட்டை ஐஆர்சிடிசி இணையதளத்தில் மாற்றுவது எப்படி?

இந்திய இரயில்வேயின் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை மாற்றுவதற்கான கோரிக்கையானது ரயில் புறப்படும் நேரத்திற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாக கோரிக்கையை எழுப்பலாம். 

IRCTC Indian railways how to transfer confirmed railway tickets to family members in tamil

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பயணியால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நீங்கள் பயணம் செய்து, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்திருந்தால், சில காரணங்களால் பயணம் செய்ய முடியாவிட்டால், நீங்கள் அந்த டிக்கெட்டை உங்கள் குடும்ப உறுப்பினருக்கு மாற்றலாம். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் டிக்கெட்டுக்காக செலவழித்த பணத்தை நீங்கள் மிச்சப்படுத்தலாம். குறிப்பாக இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே இடமாற்றம் இது சாத்தியமாகும். அதாவது உங்கள் தந்தை, தாய், சகோதரி, சகோதரர், மகள், மகன், கணவன் அல்லது மனைவி உட்பட்ட உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த பரிமாற்றம் செய்ய முடியும்.

இந்த சேவையைப் பெற திட்டமிடப்பட்ட ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் கோரிக்கையை எழுப்பலாம். கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே டிக்கெட் பரிமாற்றத்தைப் பெற முடியும். ஒரு டிக்கெட் ஏற்கனவே மாற்றப்பட்டிருந்தால், நீங்கள் இரண்டாவது முறையாக சேவையைப் பெற முடியாது.

திருவிழாக் காலம், திருமண நிகழ்வு அல்லது ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினை இருந்தால், அந்த நபர் ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக தங்களது டிக்கெட் பரிமாற்றக் கோரிக்கையை அனுப்ப வேண்டும். அதுபோல என்சிசி(NCC) விண்ணப்பதாரர்கள் டிக்கெட் பரிமாற்ற சேவையின் பலன்களையும் அனுபவிக்க முடியும். பயணிகளை மாற்றும் பயணிகள், பயணத்திற்கான அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். 

உங்கள் டிக்கெட்டை எவ்வாறு மாற்றுவது:

  • டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும்.
  • உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டருக்குச் செல்லவும்.
  • டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.

இதையும் படிங்க: Gold Rate Today : தாறுமாறாக அதிகரித்த தங்கம் விலை.. இப்போதைக்கு தங்கம் வாங்க முடியாது போல இருக்கே !!

டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்திய ரயில்வே வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக ஒரு பயணி டிக்கெட் பரிமாற்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும்.  இருப்பினும், வசதியைப் பெறும் பயணிகளைப் பொறுத்து இது மாறுபடலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios