ipl media rights auction : IPL Media rights ஐபிஎல் டி20 போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைக்கான முதல்நாள் ஏலத்தில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான ஏலத்தொகை ரூ.43ஆயிரம் கோடியைக் கடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

ஐபிஎல் டி20 போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைக்கான முதல்நாள் ஏலத்தில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான ஏலத்தொகை ரூ.43ஆயிரம் கோடியைக் கடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கு முன், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைக்கு ரூ.16,347 கோடிக்குதான் விற்பனையாகி இருந்தது. அதைவிட தற்போது 3 மடங்கு அதிகமாக ஏலம் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரி்க்காவில் நடக்கும் தேசிய கால்பந்து லீக் போட்டிக்கு ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ.105 கோடி ஏலம் கேட்கப்பட்டது. அதைவிட சற்று குறைவாக ஐபிஎல் போட்டிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. ஒரு கால்பந்து போட்டிக்கு ரூ.132 கோடிக்கு விற்கப்பட்டநிலையில், தற்போது ஐபிஎல் ஆட்டம் ஒவ்வொன்றுக்கும் ரூ.85 கோடி பேரம் பேசப்படுகிறது

டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி உரிமைக்கான ரிசர்வ் தொகை ரூ.10ஆயிரம் கோடியாக இருந்தது. அதைவிட கூடுதலாக ரூ.33 ஆயிரம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்துக்கான ஏலம் முடியவில்லை. முதல்நாளான நேற்று ஏலம் முடிந்துள்ளது, ஆனால், டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஏலம் இரண்டும் ரூ.50ஆயிரம் கோடிக்குமேல் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இன்று சிறப்பு பேக்கேஜுக்கான ஏலம் நடக்கிறது. அனைத்து ஏலங்களின்தொகை இறுதி செய்யப்பட்டு கடைசி நாளில் தெரிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொலைக்காட்சி உரிமத்துக்காக டிஸ்னி-ஸ்டார், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்ஸ் இந்தியா, வியாகாம்18 ஆகிய நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. டிஜிட்டல் உரிமத்துக்கு ஜீ நிறுவனம், டிஸ்னி ஸ்டார், ரிலையன்ஸ் ஜியோ , வியாகாம்18 நிறுவனஙகள் போட்டியிடுகின்றன.

முதல்நாள் மின்னணு ஏலத்தில் தொலைக்காட்சி உரிமம் ஒரு போட்டிக்கு ரூ.55 கோடிக்கு கேட்கப்பட்டுள்ளது. இது பிசிசிஐ நிர்ணயித்த ரூ.49 கோடியைவிட அதிகம். அதேபோல டிஜிட்டல் உரிமை ஒரு போட்டிக்கு ரூ.50 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டது, இது பிசிசிஐ நிர்ணயித்த ரூ.33 கோடியைவிட அதிகமாகும். டிஜிட்டல் மற்றும் தொலக்காட்சி உரிமையின்மதிப்பு ஒரு போட்டிக்கு ரூ.100 கோடியைத் தாண்டும். இது 2018-22ம் ஆண்டில் ரூ.54.50 கோடி இருந்ததைவிட அதிகமாகும்.

2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.