ipl media rights auction:உலகிலேயே 2-வது மிகப்பெரிய மதிப்பு மிக்க லீக் தொடரான ஐபிஎல் டி20 ஒளிபரப்பு உரிமையில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு கிடைத்த ரூ.48,390 கோடியை எவ்வாறு அணிகள், வீரர்கள், மாநில வாரியங்களுக்கு பிரித்துக்கொடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே 2-வது மிகப்பெரிய மதிப்பு மிக்க லீக் தொடரான ஐபிஎல் டி20 ஒளிபரப்பு உரிமையில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்துக்கு கிடைத்த ரூ.48,390 கோடியை எவ்வாறு அணிகள், வீரர்கள், மாநில வாரியங்களுக்கு பிரித்துக்கொடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

4 பிரிவுகள்

2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஐபிஎல் டி20 ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டது

யாருக்கு உரிமை

இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் நடந்தது. இதில் தொலைக்காட்சி உரிமத்தை டிஸ்னி-ஸ்டார் நிறுவனம் பெற்றது. டிஜிட்டல் உரிமத்தை இந்தியாவிலும், சிறப்பு பேக்கேஜாக ஒவ்வொரு சீசனிலும் 18 முதல் 20 போட்டிகளுக்கு உரிமையை வியாகாம் நிறுவனம் பெற்றது. வெளிநாடுகளில் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம்18 மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனங்கள் பெற்றன. 

இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மற்றும் பிரிட்டன் சந்தைக்கான ஒளிபரப்பு உரிமம் வியாகாம்18 நிறுவனம் பெற்றது. அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு ஆப்பிரிக்காவில் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம் பெற்றது.

ஒரு போட்டிக்கு எவ்வளவு

இதன்படி ஒருபோட்டிக்கு தொலைக்காட்சி உரிமமாக ரூ.57.50 கோடியை பிசிசிக்கு டிஷ்னி-ஸ்டார் நிறுவனம் வழங்கும். டிஜிட்டல் உரிமத்தில் உள்நாட்டில் ஒளிபரப்பு செய்ய ஒரு போட்டிக்கு ரூ.83.24கோடியை பிசிசிஐக்கு வியாகாம்18 நிறுவனம் வழங்கும். துணைக்கண்டத்தில் ஒளிபரப்பு செய்வதற்கு ஒரு போட்டிக்கு ரூ.50 கோடியும், சிறப்பு பேக்கேஜ் ஒளிபரப்புக்கு ரூ.33.24 கோடியும் பிசிசிஐக்கு வழங்கப்படும்.

டிஜிட்டல் உரிமத்தில் உள்நாட்டு ஒளிபரப்பு மற்றும் வெளிநாடுகளில் ஒளிபரப்பு ஆகியவை சேர்த்து ரூ.23,491 கோடி பிசிசிஐக்கு வழங்கப்படும். தொலைக்காட்சி உரிமமாக ரூ.23,575 கோடி பிசிசிஐக்கு கிடைக்கும். 

இந்த ஏலத்தில் பிசிசிஐ அமைப்புக்கு ரூ48ஆயிரத்து 390 கோடி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமமாகக் கிடைத்துள்ளது. இந்தத் தொகையை 10 அணிகளுக்கும், வீரர்களுக்கும், மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கும் எவ்வாறு பிரித்துக்கொடுக்கப்போகிறது என்பதுதான்.

8 அணிகளுக்கு எவ்வளவு

இதில் பிசிசிஐக்கு கிடைத்த ரூ.48,390 கோடியில் சரிபாதியை ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே இருந்த 8 அணிகளுக்குப் பிரித்துக்கொடுக்கப்படும். அதாவது மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு பிரித்து வழங்கப்படும். இந்த ஆண்டு சீசனுக்கு வந்துள்ள குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்கு மற்ற அணிகளுக்கு கிடைத்த அளவு தொகை வழங்கப்படாது. அதற்குசிறிது காலம்காத்திருக்க வேண்டும். அந்த வகையில் முதலில் உள்ள 8 அணிகளும் தலா ரூ.3 ஆயிரம் கோடி பெறும்.

அடுத்த பாதி யாருக்கு 

பிசிசிஐ முதல் பாதியை 8 அணிகளுக்கு வழங்கியது போல 2-வது பாதியில் 26 சதவீதத் தொகையை மாநிலங்கள் மற்றும் சர்வதேச வீரர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 74 சதவீதத் தொகை ஊழியர்களின் ஊதியம், மாநில கிரிக்கெட் அமைப்புகளுக்கு பிரித்துக்கொடுக்கப்படும். இதில் வீரர்களுக்கு மட்டும் ரூ.6,290 கோடி ஒதுக்கப்படும், ரூ.16,936கோடியை மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்கப்படும்.